புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த ஆசிரியர்களை தயார்படுத்துமாற UGC கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 22 أبريل 2022

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த ஆசிரியர்களை தயார்படுத்துமாற UGC கடிதம்

புதிய கல்வி கொள்கை

வரும் கல்வியாண்டில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த, ஆசிரியர் களை தயார்படுத்துமாறு, தமிழக பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., கடிதம் அனுப்பிஉள்ளது. கடந்த ஆண்டு முதல், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வந்து விட்டது.

தமிழகத்தில் நேரடியாக புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், அதன் முக்கிய அம்சங்கள், அரசு பள்ளி, கல்லுாரிகளில் பல்வேறு வகைகளில் அறிமுகம் ஆகியுள்ளன.

UGC கடிதம்

இந்நிலையில், சென்னை பல்கலை, மதுரை காமராஜ், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் ஆகிய பல்கலைகளுக்கு, யு.ஜி.சி.,சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுஉள்ளது.

அதில், 'வரும் கல்வி ஆண்டில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். அதற்கேற்ற தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.-

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.