பிளஸ் 2 செய்முறை தேர்வு - 18 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 23 أبريل 2022

பிளஸ் 2 செய்முறை தேர்வு - 18 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்பு!

பிளஸ் 2 செய்முறை தேர்வு

தமிழக பாட திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை மறுநாள் செய்முறை தேர்வு துவங்க உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முறையே வரும், 6, 10 மற்றும் 5ம் தேதிகளில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அறிவியல் பாடம் தொடர்பான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்க உள்ளது.

18 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்பு!

இதில், 18 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர்.இவர்களுக்கு மே 2 வரை பாடவாரியாக, பள்ளி ஆய்வகங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், பிற பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், புறத்தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதற்கிடையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் 'ஆன்லைனில்' பதிவேற்றப் பட்டுள்ளன. அவற்றை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.