ஆசிரியை மீது ஆணையத்தில் புகார்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 22 أبريل 2022

ஆசிரியை மீது ஆணையத்தில் புகார்!

மதமாற்ற பிரச்னை

திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் நடந்த மதமாற்ற பிரச்னை மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாணவியின் பெற்றோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர்

.திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழாசிரியை ஒருவர், 6ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், மதரீதியாக வேறுபாடு காட்டுவதாகவும், மத மாற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.இதுகுறித்து, மாணவியின் தந்தை, வடக்கு போலீசில் புகார் அளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் மூன்று நாட்களாக பள்ளியில் விசாரணை நடத்தினார். புகார் அளித்த மாணவி, பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியர், சக வகுப்பு மாணவியர், பிற ஆசிரியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. ஆணையத்தில் புகார்!

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரிடம், மாணவியின் தந்தை நேற்று அளித்த புகாரில், 'ஆசிரியையின் இச்செயலால் என் மகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பள்ளியில் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் சமரசம் பேச முயற்சிக்கின்றனர். குழந்தைகள் நல ஆணையம் இப்புகாரை விசாரித்து உரிய நீதி பெற்றுத்தர வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், உரிய விசாரணை மற்றும் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன், 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஹிந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.