15 ஆயிரம் ஆசிரியர் பணியிடத்துக்கு 1.5 லட்சம் விண்ணப்பம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 23 أبريل 2022

15 ஆயிரம் ஆசிரியர் பணியிடத்துக்கு 1.5 லட்சம் விண்ணப்பம்!

15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம்

கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடத்துக்கு ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கல்வித்துறை சார்பில் 6 - 8ம் வகுப்பு வரையிலான 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விண்ணப்பம் அனுப்ப நேற்று கடைசி நாளாகும்.

1.5 லட்சம் விண்ணப்பம்!

இந்த பணிகளுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 386 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் சமூக அறிவியல் பாடத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.

கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்காக மொத்தம் உள்ள 6,500 பணியிடத்துக்கு 17 ஆயிரத்து 551 பேரும்: 1,500 ஆங்கில ஆசிரியர் பணியிடத்துக்கு 12 ஆயிரத்து 935 பேரும்: 2,000 உயிரியல் ஆசிரியர் பணியிடத்துக்கு 4,000 பேரும் விண்ணப்பித்துஉள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.