எந்த தேர்வும் ரத்து இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 3, 2022

எந்த தேர்வும் ரத்து இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Schools in Tamil Nadu were gradually reopened last September and November after the corona epidemic. All classes from lower classes to plus 2 classes are running smoothly. Meanwhile, the school education department has announced that the examinations for Class 10, Plus 1 and Plus 2 will be held in May. In this case, the first phase diversion examination for classes 10, plus 1, plus 2 has been completed and the second phase diversion examination is currently underway. Those exams will be over in two more days.

In this context, it has been announced that the examinations will be held in May for the students studying in 6th to 9th classes. Meanwhile, news spread that there would be no exams for classes 1 to 5. According to the Principal Secretary, School Education, there is no cancellation of examinations for any class. Selection will take place for all class. Students in grades 1 to 5 in particular have a choice. The message cancellation is invalid. He said that the examination will be conducted to test the learning ability and learning directory ability of the students. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன. கீழ் வகுப்புகள் முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை அனைத்து வகுப்புகளும் தொய்வின்றி நடந்துவருகின்றன. இந்நிலையில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் நடக்கும் என்றும் அதற்கான அட்டவணைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் அந்த தேர்வுகளும் முடிந்துவிடும். இந்நிலையில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மே மாதம் தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு தேர்வு கிடையாது என்று செய்திகள் பரவியது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கூறும் போது, எந்த வகுப்புக்கும் தேர்வு ரத்து என்பது கிடையாது. அனைத்து வகுப்புக்கும் தேர்வு நடக்கும். குறிப்பாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு உண்டு. தேர்வு ரத்து என்ற செய்தி தவறானது. மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கற்றல் அடைவுத் திறனை சோதிக்க தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.