இலவச மாதிரி போட்டித் தேர்வு - கலெக்டர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 22, 2022

இலவச மாதிரி போட்டித் தேர்வு - கலெக்டர் தகவல்

TNPSC மாதிரி போட்டித் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு கடலுார் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

கலெக்டர் தகவல்

தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ, முதல் நிலைத் தேர்வு வரும் மே மாதம் 21ம் தேதி நடக்கிறது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக 5 இலவச மாதிரி தேர்வுகள் வரும் 25ம் தேதி முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என, மே மாதம் 19ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

பயிற்சி மாலை 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்படும். தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவ நகல் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.