நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 5ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர் உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை - செய்தி வெளியீடு நாள்: 03.02.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 3, 2022

நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 5ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர் உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை - செய்தி வெளியீடு நாள்: 03.02.2022

நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 5ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர் உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை.

செய்தி வெளியீடு எண்: 202

செய்தி வெளியீடு நாள்: 03.02.2022

நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில் நடைபெறும்

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிடம் ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்தச் சட்டமுன்வடிவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில் இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார் இருப்பினும் இந்தச் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில் அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 1-2-2022 அன்று மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் நீட் விலக்கு கோரும் இந்தச் சட்டமுன்வடிவானது.

கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும். கிறித்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சமூகநீதியைப் பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் அரண்டப்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.