அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய இதுதான் காரணமா? - ஆசிரியர் சங்கங்களின் புகாரும் அமைச்சரின் முக்கிய வாக்குறுதியும்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 28, 2026

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய இதுதான் காரணமா? - ஆசிரியர் சங்கங்களின் புகாரும் அமைச்சரின் முக்கிய வாக்குறுதியும்!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய இதுதான் காரணமா? - ஆசிரியர் சங்கங்களின் புகாரும் அமைச்சரின் முக்கிய வாக்குறுதியும்!

சென்னை: கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர் சங்கங்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், 80-க்கும் மேற்பட்ட சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜமோகன் பேசியதாவது:

"என்னமிடம் வரும் மனுக்கள், செயலி வாயிலாக முன்னுரிமை அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. பின், அவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன; அதன் வாயிலாக பயன்பெற்றோர்; அவர்களின் கருத்துகள் போன்றவை ஆவணப்படுத்தப்படுகின்றன."

"இவ்வாறாக உங்களுக்காக பணி செய்யவே, சோறு, தண்ணீர் கூட சரியாக உண்ணாமல், இரவு, பகல் பார்க்காமல் உழைக்கிறேன். இதில் வேறு எந்த பாசாங்கும், நடிப்பும் இல்லை" என்று அவர் கூறினார்.

மாணவர் சேர்க்கை குறையக் காரணம் – தலைமை ஆசிரியர்கள் புகார்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பொதுச்செயலாளர் ஞானசேகரன் பேசியதாவது:

  • கழிப்பறை சுகாதாரம்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு, கழிப்பறை சுத்தமாக இல்லாதது ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
  • மாணவர் எண்ணிக்கை சரிவு: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைப்பள்ளிகளில் 55 லட்சம் மாணவர்கள் படித்தனர். தற்போது, 45 லட்சம் மாணவர்களே உள்ளனர்.
  • இதை சரி செய்யாமல் பள்ளி நடத்த முடியாது. அரசு இதில் முதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதேபோல், பல்வேறு ஆசிரியர் சங்கத்தினரும், காலி பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


பார்வையற்ற ஆசிரியர் கோரிக்கை ஏற்பு

தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் திவாகர் பேசுகையில்:

"டெட் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது, பார்வையற்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது. அதனால், 4 சதவீத இட ஒதுக்கீட்டை பரிசீலிக்க வேண்டும். பாடநூல்கள் வெளிவரும் போதே, எங்களுக்கான 'பிரெய்லி' எனும் புள்ளி எழுத்து உள்ள நூல்களும் வழங்கினால், ஆரம்ப காலம் முதல் பாடங்களை சிறப்பாக நடத்த வசதியாக இருக்கும்" என்றார்.

அதற்கு, "இந்த பாடநூல்கள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.