Elite model school ல் இருந்து அரசு பள்ளிக்கு கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அதே மாதிரி பள்ளியில் மாற்று பணியில் பணியாற்ற இயக்குநர் ஆணை வெளியீடு.
பொருள்
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணி மற்றும் பணி மாறுதலில் பணிபுரிந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்/கணினிப் பயிற்றுநர் நிலை 1 – பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்றது - மீண்டும் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்ந்து. பார்வை
1. அரசாணை நிலை எண் 176 பள்ளிக் கல்வித் (ப.க 5(1)) துறை, நாள் 17.12.2021.
2. G.O(Ms)No.138 School Education (SSA1) Department, dated 08.08.2022
3. G.O(Ms) No.224 School Education (SSA1) Department, dated 23.12.2022.
4. G.O.210,School Education Department, Dated 18.11.2023.
5. சென்னை 06, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிக் குழு உறுப்பினர் செயலாளர் கடிதம் ந.கஎண் 1559/ஆ1/மா.ப/2026 நாள் 09.07.2026.
38 மாவட்டங்களில் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டதில். தமிழ்நாடு மாதிரி குழுமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரிந்து வரும் மற்றும் பணிமாறுதலில் நிரந்தர பணியிடத்தில் பணிபுரிந்து வரும் பட்டியலில் கண்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 1ல் உள்ளவர்கள் 08.07.2026 அன்று நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள . தமிழ்நாடு மாதிரி பள்ளி குழுமத்திலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை தெரிவு செய்து மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். மாதிரிப் பள்ளிகளின் நிர்வாக காரணங்களுக்காகவும், ஏற்கனவே ஆசிரியர்களுக்கு மாதிரிப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் அவ்வாசிரியர்கள் தொடர்ச்சியாக மாதிரிப் பள்ளிகளில் பணிபுரிவது அவசியமாக கருதப்படுகிறது என்பதால் அவரவர் பணியாற்றிய மாதிரிப் பள்ளியில் மாற்றுப் பணியில் பணிபுரிய மாற்றுப்பணி புரிதலுக்கான ஆணை (Deputation Order) வழங்கிடுமாறு பார்வை (5)ல் காண் கடிதம் வாயிலாக கோரப்பட்டுள்ளது. எனவே பார்வை (5)ல் காண் கடிதத்துடன் பெறப்பட்ட 91 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 1 ஆசிரியர்களும் 08.07.2026 ல் நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி மாறுதல் பெற்று சார்ந்த பள்ளியில் பணியேற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பணிபுரியவில்லை என்பதை உறுதி செய்த பின்பு, அவ்வாசிரியர்களுக்கு தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் குழுமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மறு உத்தரவு வரும்வரை மாற்றுப்பணியில் பணிபுரிதல் பொருட்டு பணிவிடுவிப்பாணை வழங்கிடுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப் பணிக்கு செல்வதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணியை தொடர பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் அதற்கான ஊதியம் மாதிரிப் பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என்றும் மாதிரிப் பள்ளிகள் குழும உறுப்பினர் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பட்டியலில் கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்/ கணினி பயிற்றுநர் நிலை 1 பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்ற அறிக்கையினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைத்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்
பெறுநர் சார்ந்த ஆசிரியர்கள் ( உரிய வழியாக) சுமத்தின் இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) 13-0726 நகல் 1.சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வாயிலாக)
2, சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் (முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக)
3. உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் குழுமம், சென்னை-6
(தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது)
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD Model Schools Deputation Order PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.