பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பாக கருவூல கணக்குக் துறை கூடுதல் வழி காட்டு நெறிமுறைகள் வெளியீடு!* 22.07.2026 - TAPS Interim Pay Out work flow chart - PDF
CLICK HERE TO DOWNLOAD பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பாக கருவூல கணக்குக் துறை கூடுதல் வழி காட்டு நெறிமுறைகள் வெளியீடு 22.07.2026 - TAPS Interim Pay Out work flow chart - PDF
கருவூலக் கணக்கு துறை
அனுப்புநர்:
இயக்குநர்,
கருவூலக் கணக்கு இயக்கநரகம்,
(ப.ஓ.திபிரிவு), 571, 5-வதுதளம்,
பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை,
நந்தனம், சென்னை -35.
பெறுநர்:
அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் /
சம்பளக் கணக்கு அலுவலர்கள் /
கருவூல அலுவலர்கள்.
ந.க.எண்.11711/ப.ஓ.தி./2026, நாள்:22.07.2026
ஐயா/அம்மையீர்,
பொருள்: கருவூலம் மற்றும் கணக்குத் துறை - இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் - IFHRMS-ல் செயல்பாட்டு வழிமுறை (Flow chart) - அனுப்புதல் - தொடர்பாக.
பார்வை:
அரசாணை எண்.7 நிதி (பிஜிசி) துறை, நாள்: 09.01.2026.
அரசாணை எண் 111, நிதி (TAPS) துறை, நாள்: 16.06.2026.
அரசு கடித எண்.1419011/ நிதி (TAPS) துறை/2026-3, நாள்: 02.07.2026.
இவ்வலுவலக கடித எண் : 11711/ ப.ஓ.தி./2026, நாள்:10.07.2026
01-01-2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெற்ற / பணியிடை மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தில ஏற்கனவே பார்வை 4-ல் காணும் கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பான செயல்பாட்டு வழிமுறை (Flow chart) இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
எனவே, தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு மேற்குறிப்பிட்ட செயல்பாட்டு வழிமுறையினை (Flow Chart) தெரிவித்து, அவற்றை முறையாக பின்பற்றி இடைக்கால தொகை (Interim payout) வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அனைத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு இடைக்கால தொகை (Interim payout) வழங்கப்பட்ட விவரம் குறித்த அனைத்து தகவல்களையும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் உள்ளவாறு தனிப்பதிவேடு கொண்டு உரிய முறையில் எவ்வித விடுபாடும் இன்றி பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் மண்டல இணை இயக்குநர்கள் இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் நேரடியாக செயல்பாட்டினை திறனாய்வு செய்திடவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இணைப்பு : மேற்கூறியவாறு
இயக்குநர்,
கருவூலக் கணக்கு இயக்குநரகம்.
// ஆணைப்படி அனுப்பப்படுகிறது //
முதன்மைக் கணக்கு அலுவலர்
22.07.26 Path : Other Application $\rightarrow$ Interim payout $\rightarrow$ IP initiation
Employee Retirement List
Review HR Records
Verify List Integrity
CPS / IP Declaration
Verify Signature / CPS Number
Verify option
Document: CPS/IP Form (Employee Signed)
IP Initiation
Verify Service Particulars
Validate Qualifying Service
Verify IP Benefit
Create System Proposal (Appendix -1(A) & 1(B))
Attach sanction proceedings ,option form, Retirement order and SR copies (Page 1&2, joining entry, relieving entry, last pay drawn pages, Nomination page)
Approval flow & Appear IP Processing
Initiator: Verify Service Particulars and option
Verifier: Verify and forward for approval
Approver: Approve IP Proposal and sent to CPS Wing, DTA.
CPS Wing Account Statement Processing
Kalanjiyam
www.karuvoolam.tn.gov.in
Path : Other Application $\rightarrow$ Interim payout $\rightarrow$ IP proposals
Account Statement Processing
Proposal received from DDO through IFHRMS.
verify the employee's accumulated contributions and account balances
Missing Credit Processing
Any discrepancies or uncredited contributions are identified and updated.
Missing Credit Processing for reconciliation and correction.
CPS Wing Approval
Obtain Final Approval e-sign.
Mark for Corpus Transfer to concerned PAOs/TOs.
CLICK HERE TO DOWNLOAD பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பாக கருவூல கணக்குக் துறை கூடுதல் வழி காட்டு நெறிமுறைகள் வெளியீடு 22.07.2026 - TAPS Interim Pay Out work flow chart - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.