பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த (DSE & DEE) நீதிமன்ற வழக்குகளை ஆய்வு செய்யவும் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்யவும் மாவட்ட வாரியாக இணை இயக்குநர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! The Director of School Education has issued an order appointing Joint Directors on a district-wise basis to review and continuously monitor court cases pertaining to the School Education Department (DSE & DEE).
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6.
முன்னிலை முனைவர்.ச.கண்ணப்பன்.
5.6.6760.20136/51/54/2026,
. 17.06.2026
பொருள்:
பள்ளிக்கல்வித் துறை - நீதிமன்ற வழக்குகள் - பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையைச் சேர்ந்த நீதிமன்ற வழக்குகள் ஆய்வு செய்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.
பார்வை:
அரசாணை (வாலாயம்) எண்.208 பள்ளிக் கல்வி (அந-1) துறை, .22.09.2025.
பள்ளிக்கல்வித் துறையில், பள்ளிக்கல்வி இயக்குநரகம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் கீழ்வரும் நீதிமன்ற வழக்குகளை ஆய்வு செய்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இணை இயக்குநர்கள் நிலையில் மாவட்ட வாரியாக கீழ்க்காணும் விவரப்படி கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து, இதன்வழி ஆணையிடப்படுகிறது.
மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள, இணை சார்ந்த இயக்குநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள. மாவட்டங்களை தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பான நீதிமன்ற வழக்குகளில், உரிய காலத்தில் எதிர்வாதவுரைகள் தாக்கல் செய்யப்படுகிறதா ? தீர்ப்பாணைகள் பெறப்பட்ட நேர்வுகளில் தீர்ப்பாணைகளை செயல்படுத்த அல்லது மேல்முறையீடு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதையும், காலக்கெடுவுடன் கூடிய (Time Bound Judgement) தீர்ப்பாணைகளின் மீதும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் (Contempt Petitions) மீதும், உரியவாறு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா ? என்பதையும், உறுதி செய்து கொள்ளவும், பள்ளிக்கல்வி இயக்கக சட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டுவர தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் விவரங்களை பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி இயக்குநர்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கான ஒருங்கிணைப்பாளர் / பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக, இயக்குநர் ஆகியோருக்கு தெரிவிக்குமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காணும், இணை இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டம். நீதிமன்ற வழக்குகளுக்கான ஒருங்கிணைப்பாளர் / பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக. இயக்குநர் அவர்களின் தலைமையில் 19.06.2026 முற்பகல் 11.00 மணியளவில் தனியார் பள்ளிகள் இயக்கக கூட்ட அரங்கில் (Conference Hall) நடைபெறும் எனவும்.
தவியா
13/
இக்கூட்டத்தில், மேற்காணும் இணை இயக்குநர்கள் / பள்ளிக்கல்வி இயக்கக சட்ட அலுவலர் ஆகியோர் கலந்துகொள்ளுமாறும், தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வி கல்வி இHIA இயக்குநர்
பெறுதல்
Thursday, June 18, 2026
New
பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த (DSE & DEE) நீதிமன்ற வழக்குகளை ஆய்வு செய்யவும் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்யவும் மாவட்ட வாரியாக இணை இயக்குநர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
Order of the Director of School Education
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.