வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 27 مايو 2026

வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு

வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு



வட்​டாரக் கல்வி அலு​வலருக்கு பணிக் கொடையை, மாவட்​டக் கல்வி அலு​வலரே விடுவிக்​கலாம் என்​று, தொடக்​கக் கல்​வித் துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் ஓய்​வு​பெற அனு​மதி வழங்​கும் போது, அவர்​கள் பணி​யாற்​றிய ஒன்​றி​யங்​களில் தணிக்கை அறிக்கை பெற்று பின்​னர் மாவட்​டக்​கல்வி அலு​வலர் வழி​யாக பரிந்​துரை செய்து பணிக் கொடை விடு​விப்பு ஆணை பெறு​வதற்கு கால​தாமதம் ஏற்​படு​கிறது. இதைத் தவிர்க்​கும் பொருட்​டு, வட்​டாரக் கல்வி அலு​வலர்​களுக்​கு, மாவட்​டக் கல்வி அலு​வலர்​களே பணிக் கொடை பெற்று வழங்​கு​மாறு தற்​போது அறி​வுறுத்​தப்​படு​கிறது. இதையடுத்​து, வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் பணி​யாற்​றிய அனைத்து ஒன்​றி​யங்​களி​லும், துறைத் தணிக்கை நடை​பெற்று அறிக்கை பெறப்​பட்​டதா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும். மேலும், வட்​டாரக் கல்வி அலு​வலர் மீது ஒழுங்கு நடவடிக்கையோ, ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை​யால் தொடரப்​பட்ட குற்​ற​வியல் வழக்கோ நிலு​வை​யில் இல்லை என்​ப​தையும் உறுதி செய்து கொள்ள வேண்​டும்.

இதற்​கான வழி​முறை​களை பின்​பற்​றாமல் பணிக்​கொடை விடுவிக்​கப்​பட்​டு, பின்​னர் தணிக்​கை​யில் வட்​டாரக் கல்வி அலு​வலர் அரசுக்கு செலுத்த வேண்​டிய தொகை ஏதும் இருப்​பின், அதற்கு மாவட்​டக் கல்வி அலு​வலரே முழுப் பொறுப்​பா​வார் என்​ப​தால் கூடு​தல் கவனத்​துடன் மேற்​கொள்ள அறி​வுறுத்​தப்​படு​கிறது.


வட்டாரக்கல்வி அலுவலருக்கு பணிக் கொடையை மாவட்டக்கல்வி அலுவலரே விடுவிக்கலாம் - உரிய அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.The District Educational Officer may authorize the release of the service gratuity for the Block Educational Officer — Proceedings of the Director of Elementary Education regarding the issuance of appropriate instructions.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 003808/ஐ1/2026, நாள். 20.05.2026.

பொருள்:- தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி

வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஓய்வு

பார்வை:-

பணிக்கொடை விடுவித்தல் - உரிய அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. 1. அரசாணை (நிலை) எண். 151, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)த்துறை, நாள். 09.09.2022.

2. Glægör 600601-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண், 003808 /ஐ1/2024, நாள்.07.05.2026 வட்டாரக் கல்வி அலுவலர்களின் ஓய்வூதியக் கருத்துருக்கள் அனுப்பும் போது பார்வை 2 ல் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதுநாள் வரையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற அனுமதி வழங்கும் தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணையில், தணிக்கை நடைபெறாத மற்றும் தணிக்கை அறிக்கை பெறப்படாத ஒன்றியங்களை குறிப்பிட்டு பணிக்கொடை நிறுத்தம் செய்து ஆணை வழங்கப்படுகிறது., இந்நிலையில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியாற்றிய ஒன்றியங்களில் தணிக்கை அறிக்கை பெற்ற பின்னர், மாவட்டக் கல்வி அலுவலர் வழியாக பரிந்துரை செய்யப்பட்டு பணிக்கொடை விடுவிப்பு ஆணை பெறுவதற்கு கடிதப் போக்குவரத்தினால் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, மேற்காண் காலதாமதத்தினை தவிர்க்கும் பொருட்டு வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நியமன அலுவலர் தொடக்கக் கல்வி இயக்குநர் என்ற போதிலும், அரசாணை எண். 151 பள்ளிக் கல்வித்துறை நாள். 09.09.2022 ன் படி வட்டாரக் கல்வி அலுவர்களின் பணிப்பதிவேடு மற்றும் ஓய்வூதியப் பலன்கள் பெற்று வழங்கும் அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி) என்பதால், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பணிக்கொடை பெற்று வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியாற்றிய அனைத்து ஒன்றியங்களிலும் துறைத்தணிக்கை நடைபெற்று அறிக்கை பெறப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

1. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியாற்றிய ஒன்றியங்களில், தற்போது பணிபுரிந்து வரும் வட்டாரக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் தணிக்கை தடை சான்றுகளை முறையாக ஆய்வு செய்து துறைத் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் 2. தணிக்கை தடை நிவர்த்தி செய்து பெறப்படும் தடைநீக்க சான்று உரிய அலுவலர் வழியாக பரிந்துரை செய்யப்பட்டு தடைநீக்கம் பெறப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் 3. ஊதிய நிர்ணயம் சார்ந்து ஏற்படுத்தப்படும் தணிக்கை தடையில், தணிக்கை தடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம் சமர்ப்பிக்கப்படும் போது ஊதிய மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் 4. ஊதிய நிர்ணயம் சார்ந்து அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதுமில்லை என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் 5. வட்டாரக் கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கையோ, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கோ நிலுவையில் இல்லை என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்

மேலும், மேற்காண் வழிமுறைகள் எதனையும் பின்பற்றாமல், பணிக்கொடை விடுவிக்கப்பட்டு பின்னர் தணிக்கையில் வட்டாரக் கல்வி அலுவலர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதுமிருப்பின் அதற்கு பணிக்கொடை விடுவிக்கும் அலுவலரே முழுப் பொறுப்பாவார் என அனைத்து மாவட்டக் அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

노 கல்வி பெறுநர்

தொடக்கக்கல்வி இயக்குநர்

20/5/26

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) (மின்னஞ்சல் வழியாக)

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.