தேர்தல் கமிஷனின் 'ஆன்லைன்' தேர்வில் கேலிக்கூத்தான 'ஆப்சன்'
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அதிர்ச்சி
மதுரை, ஏப். 20-தேர்தல் கமிஷன் சார்
பில் பி.ஓ.,க்களுக்கான (ஓட்டுச்சாவடி அலுவ லர்) ஆன்லைன் தேர்வில் முகவரி அட்டை எங்கே இணைக்க வேண்டும் என்ற கேள்விக்கு 'பி.ஓ., நெற்றியில்' என பதிலுக் கான 'ஆப்சன்' இடம் பெற்றுள்ளது ஆச்சரியப் பட
சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு பணி களில் ஈடுபடும் பி.ஓ., பி.ஓ.,1 முதல் பி.ஓ., 3 வரை உள்ள அலுவலர்க ளுக்கு தேர்தல் கமிஷன் ஆன்லைன் தேர்வு நடத் தியது. இதில் பி.ஓ.,க்க ளுக்கு நடத்திய தேர்வில், 'முகவரி அட்டை (அட்ரஸ் டேக்) எங்கே இணைக்கப்
பட வேண்டும்' என்ற கேள் விக்கு கொடுக்கப்பட்ட 4 பதில்களில் ஒன்றாக தலைமை அலுவலரின் (பி.ஓ.,) நெற்றியில்' என வும் இடம் பெற்றிருந்தது. இதனால் அப்பணி ஒதுக்கப்பட்டுள்ள ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் கூறியதாவது:
ரூ.பல கோடி செல விட்டு தேர்தல் நடக் கிறது. தேர்தல் பணிகள் நிலை குறித்து அளிக்கப் படும் பயிற்சிகளில் எந்த அளவுக்கு புரிதல் உள்ளது என்பது குறித்து இம்முறை ஆன்லைன் தேர்வும் நடத் தப்பட்டது. 15 வினாக்கள்
இடம் பெற்றன.
குறிப்பாக ஓட்டுப்பதி வின்போது அதிகாலை 'மாதிரி ஓட்டுப் பதிவு' நடத்தப்படும்.
அதன்பின் பேலட் யூனிட், கன்ட் ரோல் யூனிட், விவி பாட் ஆகிய பெட்டிகளில் எவ் வாறு டேக் (சீலிட) வேண் டும் என்ற வரைமுறை உள்ளது.
மாதிரி ஓட்டுப்ப திவுக்கு பின் சீலிடப்படும் இது, மே 4 ல் ஓட்டு எண் ணிக்கையின்போது தான் 'ஓபன்' செய்யப்படும்.
அது தொடர்பான கேள்விக்கு 'பி.ஓ.,வின் நெற்றியில் டேக் செய்ய வேண்டும்' என்ற பதில் கேலிக்கூத்தாக அமைந்துள்ளது என்றனர்.
Tuesday, April 21, 2026
New
தேர்தல் கமிஷனின் 'ஆன்லைன்' தேர்வில் கேலிக்கூத்தான 'ஆப்சன்' - ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அதிர்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.