பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 18, 2026

பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.



பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

இவ்வழக்கின் மீது இவ்வாணையத்தில் இன்று (29.01.2026) முற்பகல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையில் மனுதாரர் செல்வி ஆர். பிரியதர்ஷினி அவர்கள். தான் எத்திராஜ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும். கணினி அறிவியல் பாடத் தேர்வு இன்று நடைபெறவுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்களிக்குமாறும். தன்னுடைய இரண்டாவது மேல்முறையீட்டின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளுமாறும் தொலைபேசி மூலம் தெரிவித்தார். அன்னாரின் வேண்டுகோளை ஏற்று செல்வி ஆர். பிரியதர்ஷினி அவர்கள் விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்களிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு. க. ஜெயராமன். பொதுத் தகவல் அலுவலர்/துணை இயக்குநர் (மேல்நிலை இரண்டாமாண்டு) அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை அவர்கள் நேரில் ஆஜரானார். மனுதாரர். 28.05.2023 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மார்ச் 2023ல் நடைபெற்ற HSE (+2) பொதுத் தேர்வில் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர். சென்னை 37ல் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்.

தன்னுடைய பதிவு எண் 7802288 என்றும் தான் தேர்வு எழுதிய, தமிழ், ஆங்கிலம். இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் கணக்குத் தேர்வு பாடங்களுக்கான விடைத்தாள்களின் நகல்களை தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைக் கட்டண விதிகளின்படியும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, சட்டப் பிரிவு 2(1)ன்படியும் சான்றொப்பமிட்டு வழங்கிடக் கேட்டு, பொதுத் தகவல் அலுவலர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார்.

பொதுத் தகவல் அலுவலர்/துணை இயக்குநர் (மேல்நிலை இரண்டாமாண்டு அவர்கள் 15.06.2023 நாளிட்ட கடிதத்தில், 'மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்ட 08.05.2023 நாளிட்ட செய்தி அறிவிக்கையின்படி 09.05.2023 முதல் 13.05.2023 வரை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பதற்கு 5 நாட்கள் மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டது.

மனுதாரர் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு, இயற்பியல் பாடத்திற்கு மட்டுமே விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளார். இதர பாடங்களான தமிழ், ஆங்கிலம். வேதியியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கவில்லை. This document is an order from the Tamil Nadu Information Commission regarding an appeal for exam answer sheet copies under the Right to Information Act. The main points of the order are:

A hearing was held on January 29, 2026, regarding case number SA12953A/2023.

The appellant, Tmt. R. Priyadarshini, requested copies of her March 2023 HSE (+2) exam answer sheets from the Directorate of Government Examinations.

The commission noted the appellant had previously requested answer sheets only for the Physics subject, not all subjects, within the specified timeframe.

பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

உச்ச நீதிமன்றம் , உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் படி திருத்தப்பட்ட தாள் தகவல் ஆகும்.

பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

👇👇👇

- CLICK HERE TO DOWNLOAD தகவல் பெறும் உரிமைச் சட்டம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.