மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் - 2025-26 மதிப்பீட்டு முகாம் பணி முதுகலை ஆசிரியர்கள் மதிப்பீட்டு முகாம் -பணி தெரிவு செய்தல் - தொடர்பாக - CEO PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 18, 2026

மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் - 2025-26 மதிப்பீட்டு முகாம் பணி முதுகலை ஆசிரியர்கள் மதிப்பீட்டு முகாம் -பணி தெரிவு செய்தல் - தொடர்பாக - CEO PROCEEDINGS

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண்.6452/அ4/2025

बी: 18.03.2026

பொருள்:

மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் - 2025-26 மதிப்பீட்டு முகாம் பணி முதுகலை ஆசிரியர்கள் மதிப்பீட்டு முகாம் -பணி தெரிவு செய்தல் - தொடர்பாக.

பார்வை:

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேரடி அறிவுரை நாள்.18.03.2026. நடைபெற்று வரும் 2025-2026 மேல்நிலைப் பொதுத்தேர்வுகளுக்கான மதிப்பீட்டு முகாம் பணிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கீழ்காணும் பள்ளிகளில் நடைபெற உள்ளது.

1. அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.

2. அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, உளுந்தூர்பேட்டை பார்வையில் காணும் முதன்மைக்கல்வி அலுவலரின் நேரடி அறிவுரையின்படி, மைய மதிப்பீட்டு முகாம் பணிக்காக அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்காணும் மதிப்பீட்டு முகாம் பணியில் ஈடுபட தங்களது பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை /தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள் விருப்பத்தின் பேரில் தெரிவு செய்த விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE SHEET இல் 18.03.2026 இன்று மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்திடுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. முதுகலை / தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள் பணியில் சேர்ந்த நாள் மற்றும் வேறு ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் இவ்வலுவலக அ4 பிரிவிற்கு தகவல் உடன் தெரிவிக்க வேண்டும்.

2. ஆசிரியர்கள் பெயர்கள் விடுபட்டு இருப்பின் சார்ந்த ஆசிரியர்கள் விவரங்களை EBS . படிவத்தில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது


This is an urgent official notice regarding the selection of teachers for the 2025-2026 Higher Secondary Public Examination evaluation camp in Kallakurichi district.

Evaluation camps are scheduled at Government Model Girls Higher Secondary Schools in Kallakurichi and Ulundurpet.

Headmasters and Principals must submit the details of willing Postgraduate/Vocational teachers and Computer Instructors via the provided Google Sheet link.

The deadline for submission is today, March 18, 2026, by 5:00 PM.

Any corrections regarding teachers' joining dates or missing names must be reported immediately to the A4 section of the Chief Educational Officer's office

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.