Government Order of the Director of School Education, Tamil Nadu - Appointment of Additional Charge as Chief Educational Officer of Tiruvallur District
Mrs. K. Karpagam, Chief Educational Officer of Tiruvallur District, has gone on medical leave due to illness.
As public examinations are being conducted, considering administrative interest, Mr. K. Subbarao has been appointed as the officer in additional charge.
Mr. K. Subbarao, Deputy Director (Administration), Directorate of Elementary Education, Chennai, will handle this responsibility with additional financial powers.
This order comes into effect immediately and will remain in force until further orders.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 முன்னிலை முனைவர் ச.கண்ணப்பன்
5.5.6.4655/1/4/2026, . 08.03.2026
பொருள்:
பள்ளிக்கல்வி திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கோ.கற்பகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி 08.03.2026 முதல் மருத்துவ விடுப்பு நிருவாக காரணங்களின் பொருட்டு கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் -ஆணையிடுதல் தொடர்பாக.
பார்வை:
தொலைபேசி வழி தகவல் நாள். 08.03.2026.
திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வரும் திருமதி.கோ.கற்பகம் என்பார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி வாயிலாக தகவல் பெறப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக, தற்போது அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பணிகளின் முக்கியத்துவம் மற்றும் மந்தனத்தன்மைக் கருதியும். நிருவாக நலன் கருதியும். சென்னை-6, தொடக்கக்கல்வி இயக்குநரகத்தில் துணை இயக்குநராகப் (நிருவாகம்) பணிபுரிந்து வரும் திரு.கோ.சுப்பாராவ் என்பாரை திருமதி.கோ.கற்பகம் விடுப்பில் உள்ளதால் ஏற்பட்ட காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து இதன் வழி ஆணையிடப்படுகிறது.
இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது எனவும். மறு ஆணை பிறப்பிக்கப்படும்வரை இவ்வாணை நடைமுறையில் இருக்கும் எனவும். தெரிவிக்கப்படுகிறது. திரு.கோ.சுப்பாராவ், தமது வழக்கமான பணிகளுடன் திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கான நிதி அதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் பணிபுரியவும் அனுமதித்து இதன் வழி ஆணையிடப்படுகிறது. ஒப்பம். முனைவர் ச.கண்ணப்பன்
பள்ளிக்கல்வி இயக்குநர் பெறுநர்
திரு.கோ.சுப்பாராவ்,
துணை இயக்குநர் (நிருவாகம்)
தொடக்கக்கல்வி இயக்ககம்.
சென்னை-6.
நகல்
1. முதன்மைக்கல்வி அலுவலர். திருவள்ளுர்,
2. தொடக்கக்கல்வி இயக்குநர், சென்னை-6..
3. அரசு தேர்வுகள் இயக்குநர், சென்னை-6.
4. அரசு கூடுதல் தலைமைச்செயலாளர்.
பள்ளிக்கல்வித்துறை, தலைமைச்செயலகம், சென்னை-9.
(தகவலின்பொருட்டு பணிந்தனுப்பப்படுகிறது.)
முதன்மைக்கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - The proceedings of the Director of School Education regarding the appointment of an Officer of Additional Responsibility as a Principal Educational Officer.
திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..
திருவள்ளுர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.கோ.கற்பகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி 08.03.2026 முதல் மருத்துவ விடுப்பு - நிருவாக காரணங்களின் பொருட்டு கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.