Newly Appointed Teachers Induction Training- Instructions புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - DSE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 14, 2026

Newly Appointed Teachers Induction Training- Instructions புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - DSE Proceedings



புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - DSE Proceedings

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி - Dir Proceedings

பொருள்: பள்ளிக்கல்வி பார்வை:

மேல்நிலைக்கல்விப்பணி - அரசு

மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-I / கணினி பயிற்றுநர் நிலை-I காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு - EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு 16.02.2026 முற்பகல் பணியில் சேர அறிவுரைகள் வழங்கப்பட்டமை புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு புதுமுக பயிற்சி வகுப்பு (Induction Training) - அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெறுதல் - தொடர்பாக.

18.02.2026

1. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் செய்யப்பட்ட தெரிவுப்பட்டியல் - பெறப்பட்ட நாள்.31.01.2026.

2. சென்னை-06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) ந.க.எண்.034110/W3/இ3/2024, செயல்முறைகள்,

09.02.2026. 3. GOOб0601-06,

நாள்.07.02.2026 மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் ந.க.எண்.034110/W3/இ3/2024, செயல்முறைகள், நாள்.10.02.2026. அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-I / கணினி பயிற்றுநர் நிலை- காலிப்பணியிடங்களில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு EMIS இணையதளம் வாயிலாக பணிநியமன கலந்தாய்வு 07.02.2026 மற்றும் 09.02.2026 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டு, 20 மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் பணிநியமன ஆணைகள் 13.02.2026 அன்று வழங்கப்பட்டு, இதர மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பணிநியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் தனிநபர் மருத்துவச்சான்று பெற்று, 16.02.2026 அன்று தாங்கள் நியமனம் பெற்றுள்ள பள்ளிகளில் பணியேற்க வேண்டும் அறிவுரைகள் பார்வை-3, இல் காணும் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக பணிநியமனம் பெற்று பணியில் சேர்ந்த இணைப்பில் காணும் மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை-I / கணினி பயிற்றுநர் நிலை-I ஆகியோருக்கு கீழ்க்காணும் விவரப்படி புதுமுக பயிற்சி வகுப்பு (Induction Training) நடத்தப்படவுள்ளது என்ற விவரம் தொடர்புடைய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கிவைக்கவுள்ளார்கள்.

இவ்விவரத்தினை புதிதாக பணியில் சேர்ந்துள்ள மேற்காணும் ஆசிரியர்களுக்கு தெரிவித்து அவர்களை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD Newly Appointed Teachers_ Induction Training- Instructions PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.