DSE - Internal Mark Uploading Dates - +2 அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் நாட்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 22, 2026

DSE - Internal Mark Uploading Dates - +2 அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் நாட்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

+2 அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் நாட்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

DSE - Internal Mark Uploading Dates

+2 அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் நாட்கள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Dates for uploading marks for +2 internal assessment - Directorate of Government Examinations Announcement

சென்னை-6. அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச் ஏப்ரல் 2026-மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் தொடர்பாக

பார்வை:

இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள். 09.02.2026

பார்வையில் காணும் கடிதத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கு ஒவ்வவொரு பாடத்திற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை மதிப்பெண் பட்டியலில் பதிய வேண்டும் என்றும், பின்னர் அம்மதிப்பெண்களை இவ்வலுவலகத்தால் அறிவிக்கப்படும் நாட்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட User ID மற்றும் Password பயன்படுத்தி, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பதிவேற்றம் செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் 25.02.2026 பிற்பகல் முதல் 07.03.2020 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்யுமாறும், பின்னர் அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியல்களை சப்ந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் 10.03.2026 -க்குள் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

பெயர்பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரது அக மதிப்பீட்டு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பள்ளி தலைமையாசிரியர் உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது

மேற்காண் விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.