மாணவரை 'நாய்' எனக் கூறிய ஆசிரியை பணியிட மாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 22, 2026

மாணவரை 'நாய்' எனக் கூறிய ஆசிரியை பணியிட மாற்றம்

மாணவரை 'நாய்' எனக் கூறிய ஆசிரியை பணியிட மாற்றம்

மாணவரை 'நாய்' எனக் கூறிய ஆசிரியை பணியிட மாற்றம் - திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

திண்டுக்கல் அருகே தொடக்கப்பள்ளியில் இடை நின்ற நிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட 5ம் வகுப்பு மாணவரை 'நாய்' என திட்டிய ஆசிரியை திருமலைப்புதுார் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள 5ம் வகுப்பு மாணவர் இடை நின்றார்.தனிநபர் ஒருவர் மாணவரிடம் பேசி அதேப் பள்ளியில் மீண்டும் சேர்த்தார். இந்நிலையில் அந்த மாணவரை பள்ளி ஆசிரியை பாத்திமா 'நாய்' என திட்டியதால் பள்ளிக்கு வராது மாணவர் வீட்டில் இருந்தார். இதை அறிந்த தனிநபர் மாணவரை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியை பாத்திமாவிடம் முறையிட்டார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் விபரம் நேற்று மதியம் 3:00 மணிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதியழகனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் வட்டாரக்கல்வி அலுவலர் செலின்மேரியிடம் விசாரிக்க உத்தரவிட்டார். அவர் ஆசிரியை, மாணவரை பள்ளியில் சேர்த்த நபரிடம் விசாரித்து அறிக்கை அளித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், ஆசிரியை பாத்திமாவை திருமலைப்புதுார் தொடக்கப் பள்ளியில் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.