SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு! Directorate of Government Examinations arranges for correction/addition/deletion in SSLC public examination name list!
This notice instructs school principals in Tamil Nadu and Puducherry to correct, add, or delete student information for the upcoming March/April 2026 Class 10 public examinations.
Principals must review and update student details like names, photos, birth dates, and medium of instruction.
Corrections, additions, and deletions must be processed through the Assistant Directors of Government Examinations in Tamil Nadu or the Joint Director (Education) in Puducherry.
The original download period for the student list was February 14 to February 18, 2026. SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!
பார்வையில் காணும் கடிதத்தில், நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை 14.02.2026 பிற்பகல் முதல் 18.02.2026 வரையிலான நாட்களில் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது, பெயர்பட்டியலில் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் விவரங்களில் பெயர், புகைப்படம், பிறந்ததேதி (வயது தளர்வாணை பெற்றவர்கள் உட்பட), பயிற்றுமொழி ஆகியவற்றில் திருத்தம் (Correction) மேற்கொள்ளவும். விடுபட்ட மற்றும் புதியதாக சேர்க்கைப் பெற்றுள்ள மாணவர்களை சேர்த்திடவும் (Addition). இறப்பு (Death) / மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் நீக்கம் (Deletion) செய்வதற்கும் பள்ளிகளிலிருந்து விவரங்களைப் பெற்று தமிழ்நாட்டில் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அலுவலகங்களிலும், புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) அலுவலகங்களிலும்,
dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password-ஐ பயன்டுத்தி 19.02.2026 முதல் 20.02.2026 வரையிலான நாட்களில் திருத்தம். சேர்க்கை மற்றும் நீக்கம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்காண் திருத்தங்களை மேற்கொண்ட விவரங்களை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒம்/-இயக்குநர்
நகல்
1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம், -தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.
2. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்.
3. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம். -தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.
4. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள். - தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
5. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார் பள்ளிகள்), அனைத்து மாவட்டங்கள்.
CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்ககம் DGE Press Release - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.