தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்
-
சங்கத்தின் தேர்தல் சுற்றறிக்கை
-
13.01.2026
தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்காக, இதற்கு முன்னர் நடைபெற்ற சங்கத்தின் தேர்தல்களில் சிறப்பாகவும் நேர்மையாகவும் சார்புத்தன்மை இன்றியும் பணியாற்றி தலைமைச் செயலகப் பணியாளர்களின் நன்மதிப்பினைப் பெற்ற-சார்புச் செயலாளராக பணியிலிருந்து ஓய்வுபெற்ற திரு. மாணிக்கம் அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.
திரு. மாணிக்கம் அவர்கள் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலராகப் பொறுப்பேற்று, தேர்தல் வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடுவார்.
சங்கத்தின் உறுப்பினர்களாக இதுநாள்வரை தங்களை இணைத்துக் கொள்ளாத தலைமைச் செயலகப் பணியாளர்கள், உரிய சந்தாத்தொகையினை அந்தந்த துறைப் பிரதிநிதிகளிடம் செலுத்தி, சங்கத்தின் உறுப்பினராகி, சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
الأربعاء، 14 يناير 2026
New
தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் - சங்கத்தின் தேர்தல் சுற்றறிக்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.