திறந்தநிலை பள்ளி மாணவர்களும் பி.பார்ம் சேரலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 14 يناير 2026

திறந்தநிலை பள்ளி மாணவர்களும் பி.பார்ம் சேரலாம்

திறந்தநிலை பள்ளி மாணவர்களும் பி.பார்ம் சேரலாம் - Open school students can also join B.Pharm.

சென்னை, ஜன. 14: திறந்தநிலை பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களும் பி.பார்ம், டி.பார்ம், பார்ம்.டி படிப்புகளில் சேரலாம் என இந்திய மருந்தியல் கவுன்சில் அறிவித்துள் ளது.

மத்திய மற்றும் மாநில அரசு அங்கீகாரம் பெற்ற திறந்த நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான திறன் மேம் பாட்டு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. தற்போதைய சூழலில், வழக்கமான மாநில மற்றும் மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமே மருந்தியல் படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இதுதொடர்பாக மருந்தியல் கவுன் சில் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன்படி, திறந்தநிலை பள்ளி மாணவர்களுக்கும் அத்த கைய வாய்ப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியிருந் தது. ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் அந்த நடை முறை பின்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து அதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அனைத்து மாநில அரசுகளுக்கும், மாநில மருந்தியல் கவுன் சில்களுக்கும் இந்திய கவுன்சில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி யுள்ளது. விதிகளின்படி திறந்தநிலை பள்ளி மாணவர்களை யும் இளநிலை மற்றும் பட்டய மருந்தியல் படிப்பில் அனும திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.