வருமான வரியால் சம்பள பட்டியலில் குழப்பம் - அரசு ஊழியர்கள் புலம்பல்
Income tax causes confusion in the salary statement - Government employees complain.
அரசு ஊழியர்களுக்கான சம் பள பட்டியல் தயாரிப்பதற்காக கருவூலத்துறையால் ஐஎப்எச்ஆர் எம்எஸ் இணையதளம் வழியாக பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பட்டியல் தயாரிக்கும்போது அளவுக்கு அதிகமாக வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மாத சம்பளமே பெற இயலாத சூழ் நிலை உருவாகி வருகிறது.
இது குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறியது:
அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டால் கூட வாழ்வா தார நிலையை கருதி அவர்களுக்கு 50 சதவீத சம்பளம் வழங்க வேண்டும் என விதிமுறையில் உள்ளது. இந்த இணையதளத்தில் சம்பளத்தை விட அதிகமாக பிடித்தம் செய்யப்படுகிறது. மைனஸ் தொகையாக கழித்து காட்டி அடுத்த மாத சம்பளத்துக்கு வேட்டு வைக்கிறது.
இந்த பிரச்னைகளை கையாள வேண்டிய ஐஎப்எச்ஆர்எம்எஸ் இ டீம் இதை கண்டு கொள்ளவே இல்லை. வருமான வரியில் நிலு வைத்தொகைக்கு '10இ' என்ற வருமான வரி படிவத்தை பயன் படுத்தி அவர்களுக்கான வரியை
கணக்கீடு செய்வது வழக்கம். இந்த அதிகாரம் சம்பளம் பெற்று வழங்கக்கூடிய டிடிஓ அதிகாரி களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அதிகாரத்தை பட்டியல் தயாரிக்கும் கருவூலத் துறை அதிகாரிகள் பின்பற்றுவ தில்லை. வருமான வரியை சரா சரியாக பிடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து தவறி மாத சம்பளம் முழுவதையும் பிடிப்பது எந்த வகையில் நியாயம். அரசு ஊழியர்களுக்கான விதிகளை பின்பற்றி வருமான வரி நிலுவைத் தொகைக்காக 10இ படிவத்தை பயன்படுத்தி உள்ளீடு செய்வதற் கான நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
சம்பளம் பெற்று வழங்கக் கூடிய அதிகாரிகளின் அதிகாரங் களை 10இ படிவத்தை ஐஎப்எச் ஆர்எம்எஸ் இணையதளத்திலும் அனுமதிக்க வேண்டும். சம்பள துக்கான வரி பிடித்தம் செய்து வரியை காலாண்டு வாரியாக சார்ந்த சம்பளம் பெற்று வழங் கக்கூடிய அதிகாரிகள் சரியான முறையில் சரியான காலத்தில் அவைகளை பதிவேற்றம் செய் தால் தண்டத்தொகையில் இருந்து தப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
The IFHRMS website used for salary processing is reportedly deducting excessive income tax.
Employees are finding it difficult to receive their full monthly salary due to these deductions.
The issue is attributed to the treasury department not using the required 'Form 10E' for calculating arrears, a function typically assigned to Drawing and Disbursing Officers (DDOs).
Employees urge that DDOs should be allowed to use Form 10E within the IFHRMS system to resolve the problem.
Friday, January 30, 2026
New
வருமான வரியால் சம்பள பட்டியலில் குழப்பம் - அரசு ஊழியர்கள் புலம்பல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.