கார்த்திகை தீபத் திருவிழா விடுப்பு எப்போது கிறுகிறுக்க வைத்த பள்ளிக்கல்வி துறை ' ஆப்
கார்த்திகை தீபத் திருவிழா விடுப்பு எப்போது? கிறுகிறுக்க வைத்த பள்ளிக்கல்வி துறை 'ஆப்' ஆசிரியர்கள் பொது விடுமுறை நாட்களை தவிர்த்து அவசர தேவைக்காக ஆண்டுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு (சிஎல்) எடுத்துக் கொள்ளலாம். ஈட்டிய விடுப்பு (இஎல்) 20 நாளைக்கு ஒரு நாள் எடுத் துக் கொள்ளலாம். இந்த விடுப்பை எடுக்காதர்கள் அதை சரண்டர் செய்து அதற்கான சம்பளத்தை பெற்றுக் கொள்' ளலாம். அதன்படி ஆர்எல் எனப்படும் மத சார்பு விடுப்பும் உள்ளது. பொது விடுமுறை இல்லாத மத சார்பு விழா, பண்டிகைகளின்போது இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் அரசு பள்ளி மற் றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசி ரியர்கள் தங்களுக்கு தேவையான விடுமுறைகளை 'களஞ்சியம் ஆப்' வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இந்த மாதம் கார்த்திகை தீப திருநா ளுக்கு மத சார்பு விடுப்பு (ஆர்எல்) எடுத்துக் கொள்ளலாம். கார்த்திகை தீபம் இன்று (டிச. 3) கொண்டாடப் படுகிறது. இதற்காக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 'களஞ்சியம் ஆப்' வாயி லாக விண்ணப்பித்தபோது மத சார்பு விடுப்பு டிசம்பர் 4 என குறிப்பிடப் பட்டுள்ளது.
இதனால் கார்த்திகை திண்துக்கு விடுப்பு எடுக்க முடியாம இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "கார்த்திகை பண்டிகை தமிழகம் முழுவதும் டிசம்பர் 3ல் கொண்டாடப்படுகிறது. ஆனால் ‘களஞ் சியம் ஆப்'பில் இது தவறாக பதிவாகி உள்ளது. இதனால் மத சார்பு விடுப்பு எடுப்பதில் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்றனர். கவர்னர் வாழ்த்து
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'கார்த்திகை தீப திருநாளில் அனைத்து சகோதரிகளுக்கும், சகோத ரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அருணாசலேஸ்வரரின் தெய்வீக சுட ரொளி, இருளை அகற்றி, நம் மனதை ஞானத்தால் ஒளிரச் செய்து,கருணை, நல்லொழுக்கம் மற்றும் ஒற்றுமையின் நீதிசார் பாதையில் நம்மை வழிநடத் தட்டும். இந்த பிரகாசமான பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் நம்பிக்கையை அதிகரிக்கட்டும். சமூகத்தில் நல்லி ணக்கத்தை வளர்க்கட்டும். அமைதி யான,வளமான பாரதத்தை கட்டியெ ழுப்புவதற்கான நமது பொதுவான உறுதிப்பாட்டை ஆழப்படுத்தட்டும்' என தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.