மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு.
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு- IV இன் கீழ்வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்கள் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணையிடுதல் - சார்பு .
CLICK HERE TO DOWNLOAD DEO Promotion List - மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு PDF
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.
முன்னிலை:முனைவர்.ச.கண்ணப்பன்.
ந.க.எண்.077404/அ1/இ1/2024, நாள்.02.12.2025
***** அரசு
பொருள்: தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு-IV இன் கீழ்வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்கள்
உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணையிடுதல் - சார்பு. பார்வை: 1. அரசாணை (நிலை) நாள்.07.09.1988.
- எண்.1433,பள்ளிக்கல்வித்துறை, 2. அரசாணை (நிலை) எண்.50, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள்.27.02.2025.
3. அரசாணை (நிலை) எண்.154, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள்.30.06.2025.
4. 160T600601-06, செயல்முறைகள், தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் ந.க.எண்.077404/அ1/இ1/2024,
நாள்.11.07.2025, 05.08.2025, 04.09.2025 மற்றும் 17.09.2025.
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில், வகுப்பு V-இன் கீழ்வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நிரப்பப்படவேண்டிய மொத்தக் காலிப்பணியிட மதிப்பீடு '60' என அரசளவில் நிர்ணயம் செய்து பார்வை 2-இல் காணும் அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலை ஏற்பளித்து பார்வை 3-இல் காணும் அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அத்தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் வரிசை எண். 01 முதல் 36 வரையுள்ள (வரிசை எண்.04 மற்றும் 26 இல் கண்டுள்ள ஓய்வு பெற்றவர்களை தவிர்த்து) 34 அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பார்வை 4 இல் காணும் 11.07.2025 நாளிட்ட செயல்முறைகளின்படி பதவி உயர்வு/பணிமாறுதல் வழங்கி ணைகள் பிறப்பிக்கப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக 05.08.2025 நாளிட்ட செயல்முறைகளில், தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வரிசை எண்.37 முதல் 40 வரை (விகிதாச்சார சுழற்சி எண்.1029 முதல் 1032 வரை) கண்டுள்ள தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்கியும், 04.09.2025 நாளிட்ட செயல்முறைகளில், தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வரிசை எண்.41 (விகிதாச்சார சுழற்சி எண்.1033)-இல் கண்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியருக்கு பதவி உயர்வு வழங்கியும், வரிசை எண்.42 -இல் (விகிதாச்சார சுழற்சி 6T6OOT.1034) கண்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியருக்கு, பணிமாறுதல் வழங்கி 17.09.2025 நாளிட்ட செயல்முறைளின்படியும் ஆணைகள் வழங்கப்பட்டது. /2/ இந்நிலையில், தற்போது அரசால் ஏற்பளிக்கப்பட்ட தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் வரிசை எண். 43 முதல் 60 வரையுள்ள (வரிசை எண்.46 மற்றும் 48-இல் கண்டுள்ள ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களை தவிர்த்து) கீழ்க்காணும் 16 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை தொடரப்பட்டுள்ள அமர்வில்
வழக்கின் W.P.(MD).No.25387/2025 இறுதித்தீர்ப்பாணைக்குட்பட்டு (Subject to Outcome of the Writ Petition), தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் (Section 8A - Tamil Nadu School Educational Service Service Manual Volume II) விதி 2(C)(i)-இன்படி பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்கியும் அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள பணியிடத்தில் பணியமர்த்தியும் இதன்வழி ஆணையிடப்படுகிறது.
மேற்காணும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் ஒத்த நிலையில் உள்ள பணியிடங்களுக்கான ஊதிய விகிதம் நிலை-23 (ரூ.56.900/-ரூ.2,09,200/-) ஆகும். தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் (Section 8A - Tamil Nadu School Educational Service Service Manual Volume II) விதிகளில் விதி 2 (C) (iii)-இன்படி பதவி உயர்வு பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அடிப்படை விதி 22(B)-இன்படி ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ளத் தகுதியுடையவராவார்கள்.
2. பதவி உயர்வு / பணிமாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர் தனது பணியிடப் பொறுப்புகளை அப்பள்ளியின் மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்றிட அறிவிக்கப்படுகிறது. பள்ளிப் பொறுப்பினை ஏற்கும் மூத்த முதுகலை / பட்டதாரி ஆசிரியர் உண்டியல் ஏற்பளிப்பது உட்பட முழுக் கூடுதல் பொறுப்புடன் மறு ஆணைகள் பிறப்பிக்கப்படும் வரை மேற்கொள்வதற்கு செயல்பட அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
3. பதவி உயர்வு / பணிமாறுதல் பெற்ற தலைமையாசிரியர்கள் ஏற்கனவே மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் செய்யப்பட்டிருப்பின், அவர்கள், சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலரிடம் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு பணிவிடுப்பு பெற்று புதிய பணியிடத்தில் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனையொத்த பணியிடங்களில் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் த.பி.பா.. /5/
4. மேற்கண்ட பதவி உயர்வு / பணிமாறுதலினை உரிமைவிடல் செய்வதாக இருப்பின் தற்காலிக உரிமைவிடலா அல்லது நிரந்தர உரிமைவிடலா எனத் தெளிவாக குறிப்பிட்டு உரிய விண்ணப்பத்தினை சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் வழியாக உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். 5. பதவி உயர்வு பணிமாறுதல் பெற்ற தலைமையாசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது மற்றும் புதிய பணியிடத்தில் பணியில் சேர்ந்தமைக்கு உரிய அறிக்கைகளை உடன் இயக்குநருக்கும் தொடர்புடைய இதர அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெறுதல்:
நகல்:
சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் (தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர் வழியாக) 1. சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர்கள்.
2. சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.
பள்ளிக்கல்வி இயதி மஜி 02/12/25
இயக்குநர்
3. இயக்குநர், அரசுத்தேர்வுகள் இயக்ககம், சென்னை-06.
4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-06.
5. இயக்குநர், மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-06.
6. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-06.
7. செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.
8. இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-06.
9. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-06.
10. செயலாளர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்,
சென்னை-06.
11. சம்பளம் மற்றும் கருவூல அலுவலர், சென்னை(தெற்கு). 12. சார்ந்த கருவூல அலுவலர்கள்.
13. மாநில கணக்காயர், சென்னை-18.
14. இவ்வியக்கக சி1 / டபிள்யூ-1 பிரிவுகள்.
15. அரசுச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச்செயலகம், சென்னை-09. (தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது).
CLICK HERE TO DOWNLOAD DEO Promotion List - மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு PDF

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.