discussing the potential continuation of the "Ennum Ezhuthum" (Numeracy and Literacy) scheme in the new Tamil Nadu primary school textbooks. The new curriculum is being developed by a committee headed by Sultan Ahmed Ismail, with advisors including ISRO Chairman Nambi Narayanan and cricketer Ravichandran Ashwin.
The "Ennum Ezhuthum" scheme, implemented during the COVID-19 pandemic to address learning loss, has been effective and teachers want it to continue.
A new syllabus for grades 1-3 is being prepared based on the State Education Policy and is expected to be implemented next academic year. The new curriculum aims for subjects like Tamil, Mathematics, Science, and Social Science to be presented in a simple, story-like manner. The syllabus committee is also considering changes in teaching methods to align with technological advancements.
புதிய பாடப்புத்தகத்திலும் எண்ணும் எழுத்து திட்டம் ஆசிரியர்களிடம் கருத்துக்கேட்குமா தயாரிப்பு குழு
"தமிழக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகத்திலும் போது நடைமுறையில் உள்ள எண்ணும் எழுத்து பயிற்சித் திட்டம் தொடர வேண்டும். இதுகுறித்து ஆசிரியர்களி டம் கருத்துக் கேட்க வேண் டும்' என எதிர்பார்ப்பு எழுந் துள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை தற்போதுள்ள பாடத்திட்டம் மாற்றப்பட்டு மாநிலக் கல்விக் கொள்கை அடிப்படையில் புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இது அடுத்த கல்வியாண்டு முதல் நடை முறைக்கு வரும் என கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்காக இயற்கை விஞ் ஞானி சுல்தான் அகமது இஸ் மாயில் தலைமையில் பாடத் திட்டக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. குழு ஆலோசகர்களாக இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக் கெட் வீரர் ரவிச்சந்திரன், கர்நாடக இசைப் பாடகி சவு மியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவி யல் உள்ளிட்ட பாடங்கள் கதையை போல எளிமை தற் யாக கூறும் வகையில் இருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கற்பித்தலில் மாற் றங்கள், அதற்கேற்ப ஆசி ரியர்களுக்கு தேவையான பயிற்சிகள் குறித்தும் புதிய பாடத்திட்டக் குழு ஆலோ சனை வழங்க கேட்டுக்கொள் ளப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புக்கும், அதையடுத்து பத்தாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள் ளது.
இதில், குறிப்பாக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தற்போதுள்ள எண்ணும் எழுத்துத் திட்டப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநிலப் பொதுச் செயலா ளர் ராபர்ட் கூறியதாவது: புதிய பாடத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. அதேநே ரம் கொரோனா காலத்தில் தொடக்கக் கல்வி மாணவர் எண்ணும் எழுத்து திட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்யும் வகை யில் அமல்படுத்தப்பட்ட யுள்ளது. குறிப்பாக, முந்தைய கற்பித்தல் நடைமுறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வாசிப்பு, புரி தல் திறன் தமிழில் 33. ஆங்கிலம் 21. கணிதம் 28 சதவீதங்களாக இருந்தன. ஆனால் எண்ணும் எழுத்துத் திட்டம், அதுசார்ந்த பயிற்சி களால் அத்திறன்கள் தமிழ் 78.ஆங்கிலம் 33 முதல் 38, கணிதம் 8 சதவீதங்களாக அதிகரித்துள்ளன. எனவே அடுத்த கல்வியாண்டில் இப் பயிற்சி தொடர வேண்டும். புதிய பாடத்திட்டத்திலும் இத்திட்டம் சார்ந்த பயிற்சி களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பாடத்திட்டக் குழு இதுதொ டர்பான இடைநிலை ஆசி ரியர்களிடம் கருத்துக்கேட்க வேண்டும் என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.