500 மருத்துவ படிப்பு இடங்கள் காலி; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருமா NMC? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 27, 2025

500 மருத்துவ படிப்பு இடங்கள் காலி; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருமா NMC?



500 மருத்துவ படிப்பு இடங்கள் காலி; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருமா NMC? 500 medical study seats are vacant; Will NMC allow admission of students?

500 மருத்துவ படிப்பு இடங்கள் காலி; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருமா என்.எம்.சி.,?

நாடு முழுதும் காலியாக உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவ படிப்பு இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதிக்காக மாநில அரசுகள் காத்திருக்கின்றன.

தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 6,600 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,583 பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் உள்ளன.

நிர்வாக ஒதுக்கீட்டில், 1,736 எம்.பி.பி.எஸ்., 530 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 72,194 பேர் தர வரிசை பட்டியலில் தகுதி பெற்றனர். இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி கவுன் சிலிங் நடத்தப்பட்டது. பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் நடந்தது. இதுவரை நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், 25 எம்.பி.பி.எஸ்., மற்றும் 23 பி.டி.எஸ்., என, 48 இடங்கள் காலியாக உள்ளன.

இதில், சென்னை மற்றும் சிதம்பரத்தில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில், மூன்று பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிலும் ஒரு பி.டி.எஸ்., இடம் நிரம்பாமல் உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி.,யிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுதும், 1.12 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்தும், 500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில், தமிழகத்தில் மட்டும், 48 இடங்கள் நிரம்பமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப என்.எம்.சி., அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைக்காத பட்சத்தில் இவ்விடங்கள் நிரப்பப்படாமல் விடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.