பள்ளிக்கல்வி இயக்ககம் - செய்திக் குறிப்பு ( 03.10.2025 ) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 5, 2025

பள்ளிக்கல்வி இயக்ககம் - செய்திக் குறிப்பு ( 03.10.2025 )



பள்ளிக்கல்வி இயக்ககம் - செய்திக் குறிப்பு ( 03.10.2025 )

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) 2024 ம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II A ( நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள் ) தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வித்துறையில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு 06.10.2025 ( திங்கள்கிழமை ) அன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணைய வழியாக ( google meet ) நடைபெறவுள்ளது. எனவே . மேற்படி உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்கள் தங்களுடைய தெரிவு கடிதத்தில் ( Selection Letter ) குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 06.10.2025 அன்று காலை 10.00 மணியளவில் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது . மேற்காண் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பணிநாடுநர்கள் TNPSC Selection Letter மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் ஒரு நகலினை ( மேலொப்பம் Attested copy ) சரிபார்ப்புக்கு எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

நாள் : 03.10.2025 பள்ளிக் கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.