ஒவ்வொரு மாதமும், 'பியூச்சர் ரெடி' என்ற தலைப்பில் தேர்வுகள் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு!!!
அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு மாதமும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அ ரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கல்வி சார்ந்த எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும், 'பியூச்சர் ரெடி' என்ற தலைப்பில் தேர்வுகள் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சார்பில், மாநில கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வாயிலாக வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அந்த வினாத்தாள்கள், மாணவர்கள் சுயமாக சிந்தித்து, விடையளிக்கும் வகையில் அமைய உள்ளன.
இந்த தேர்வுகளை மாதந்தோறும் நடத்தி, மாணவர்களின் சிந்தனை மேம்பாடு மற்றும் கல்வியின் மீதான ஆர்வம் மற்றும் புரிதலை கவனித்து, ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.