அரசுப் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் - தலைமை ஆசிரியர் அதிர்ச்சி விளக்கம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 14 يوليو 2025

அரசுப் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் - தலைமை ஆசிரியர் அதிர்ச்சி விளக்கம்!



அரசுப் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் - தலைமை ஆசிரியர் அதிர்ச்சி விளக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி கல்லூரியை சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேக்காட்டூர் நமணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அங்குள்ள பிள்ளைகளின் வசதிகளுக்காக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றன. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கலா என்பவர் பணியாற்றி வருகிறார். கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்

இவர் இந்த பள்ளியில் சுமார் 18 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இந்த சூழலில் பள்ளியில் உள்ள கழிவறைகளை அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சுத்தம் செய்துள்ளனர். இதனைக் கண்ட மர்ம நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த சம்பவம் கல்வித் துறை அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டன அதில் இந்த சம்பவம் கடந்து ஜூலை 10ஆம் தேதி நடந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டன. முதன்மை கல்விஅலுவலர் விசாரணை

அப்போது அவர் கூறுகையில், நமணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்றோம். ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களிடம் நடந்த விபரங்களை கேட்டு அறிந்ததாக கூறினார். அப்போது பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தனரா? இது உண்மையாகவே நடந்ததா? என்று கேள்வி எழுதிய போது அதற்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் உண்மைதான் என்று கூறினர்.

அதுமட்டுமில்லாமல் இந்த பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது மட்டுமின்றி, கழிவறையில் உள்ள தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவது, பள்ளியை கூட்டி தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதாக கல்வித்துறை அதிகாரிகளிடம் குற்றம்சாட்டினர். மேலும் கல்வி கற்பதற்காக தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். சமூகவலைதளத்தில் வைரலாகி வீடியோ

ஆனால் ஆசிரியர்களே மாணவ மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்வது துப்புரவு பணிகளில் ஈடுபடுத்துவது நல்லதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் நன சமுத்திரம் ஒன்றிய தொடக்க பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துகிறார்களா என்று உறுதி செய்ய வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து புகாரின் பெயரில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தது குறித்து நமணசமுத்திரம் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலா விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், தலைமை ஆசிரியர் கலா கூறுகையில், மாணவர்களை நான் கழிவறையை சுத்தம் செய்ய சொல்லவில்லை. தலைமை ஆசிரியர் விளக்கம்

மேலும் பள்ளி கழிவறையை சுத்தம் செய்வதற்கு என ஆட்கள் உள்ளதாக கூறினார். மேலும் இந்த பள்ளியில் தன் மீது பள்ளி சமையலர் கால்புணர்ச்சியில் இதனை செய்ததாக கூறினார். மேலும் அவர்தான் பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்து வீடியோ எடுத்துள்ளார் பின்னர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்ததாக கூறினார்.

தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது, தலைமை ஆசிரியர்களின் உணவு பாக்ஸ்களை கழுவுவது, துப்புரவு பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.