அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 5 أغسطس 2025

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!



அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணிகளுக்கு 574 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரைவாளர் பணி

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணி: Guest Lecturers

காலியிடங்கள்: 574

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சம்மந்தப்பட்ட பாடத்தில் நெட், செட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசி விதிமுறைப்படி பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின் படி 57-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.