DSE - Retirement Benefits - நீண்ட நாள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவாக முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 25 مايو 2025

DSE - Retirement Benefits - நீண்ட நாள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவாக முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



நீண்ட நாள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்களை விரைவாக முடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Retirement Benefits

பொருள்: - பள்ளிக்கல்வி பொது வைப்புநிதி / பணிக்கொடை / பங்களிப்பு Settlement ஓய்வூதியம்(GPF/DCRG/CPS ஆகிய ஓய்வூதியப்பலன்களுக்குரிய நீண்ட நாள் நிலுவை இனங்களை விரைவாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு முடிக்க கோருதல் சார்பு. பார்வை:

1. பள்ளிக்கல்வி இயக்குநரின் நேர்முக கடித எண்.079798/ஆர்1/இ1/2024, நாள்.07.12.2024 2. சென்னை-35, நந்தனம் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை ஆணையரிடமிருந்து வரப்பெற்ற நே.மு.க.எண். 280/E1/2024, நாள்.28.11.2024 3. தலைமைச் 07.05.2025 செயலகம், நிதித்துறை செயலர் அவர்களால் அன்று நடத்தப்பட்ட தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள்.

ஆய்வுக்கூட்டத்தில் ***** மேற்காணும் பொருளில் குறிப்பிட்டுள்ளபடி தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து அலுவலர்கள்/ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஓய்வு பெற்ற/ஓய்வு பெற உள்ளவர்களின் ஓய்வூதியக்கருத்துருக்கள் சார்ந்த விவரங்கள் சென்னை மாநிலக்கணக்காயர்/ கருவூலக்கணக்கு ஆணையரகத்திற்கு அனுப்பப்பட்டு அனைத்து பணியாளர்களின் ஓய்வூதிய பணப்பலன்கள் விரைந்து பெற்று வழங்கிட இயக்குநர் அவர்களால் தனிகவனம் செலுத்தப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு நிலுவை இனங்கனை குறைப்பதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் மேற்படி பொருள் தொடர்பாக 07.05.2025 அன்று சென்னை நிதித்துறை செயலர் அவர்கள் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் வழங்கப்பட்டன.

கீழ்காணும் அறிவுரைகள்

1. ஏப்ரல் 2024 முதல் ஏப்ரல் 2025 வரையுள்ள காலங்களுக்கு பள்ளி கல்வித்துறையில் GPF, DCRG மற்றும் CPS நிலுவையினங்கள் அதிக அளவு உள்ளது.

2. மேற்படி இனங்களை சிறப்பு கவனம் செலுத்தி 31.5.2025 க்குள் மேற்படி நிலுவை இனங்களை முடிவு செய்யப்படவேண்டும்.

இனி வாரந்தோறும் மேற்படி பொருள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். 4. மே 2025 முதல் அக்டோபர் 2025 வரையுள்ள காலங்களில் ஓய்வு பெறவிருக்கும் பணியாளர்களின் விபரங்களும் கூட்டத்தில் பகிரப்பட்டு அவற்றில் மே 2025 மற்றும் ஜூன் 2025 மாதங்களுக்குரிய நிலுவை இனங்களை 31.05.2025 க்குள் முடிவு செய்ய வேண்டும்.

எனவே மேற்படி ஏப்ரல் 2025 வரையுள்ள GPF, DCRG மற்றும் CPS நிலுவையினங்களின் பட்டியலும் மே 2025 முதல் அக்டோபர் 2025 வரையுள்ள காலத்திற்குரிய பட்டியலும் (Excel Format) மின்னஞ்சல் மூலமாகவும் வாட்சஸ் அப் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது, மேற்படி பட்டியலினை ஆய்வு செய்து சிறப்பு கவனம் செலுத்தி 31.05.2025 க்குள் நிலுவையினை பூஜ்ஜியமாக்கி அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வினம் தொடர்பாக வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உரிய காரணங்கள் இன்றி GPF, DCRG மற்றும் CPS நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட DDO அலுவலர்கள் மீதும் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் IFHRMS ல் ஓய்வூதிய பிரேரணைகள் சமர்பிக்கும் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

1. மறுநியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு புதிய IFHRMS ID உருவாக்கப்படும்போது அரசு பணியில் சேர்ந்த நாள் வரும் கலத்தில் அப்பணியாளர்கள் மறுநியமனம் செய்யப்படும் நாளை குறிப்பிட வேண்டும். மேலும் Pay Element-ல் Re- employment Pay என்று இருக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட DDO-ல் Login -ல் சரி பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

2. மாவட்டங்களில் பணிபுரியும் சன்யாஸ்திரிகளின்(NUN) விவரம் மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தாளாளர்களின் விவரங்களில் பணியாளர் என்பதை Sanctioner என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். 3. ஓய்வுபெற்ற பணியாளர்களுக்குரிய பொதுவைப்பு நிதி (GPF) கணக்கினை முடித்து உரிய தொகையினை உடனடியாக பெற்றளிக்க வேண்டும். இதற்கு தணிக்கை தடை, ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட இதர காரணங்களை சுட்டிக்காட்டி அவர்களது முடிவுத்தொகையினை (GPF Closure) நிறுத்தி வைக்க கூடாது.

4. ஓராண்டிற்குள் ஓய்வுபெற உள்ள பணியாளர்களின் பட்டியிலினைத் தயாரித்து அவர்களின் பணிப்பதிவேடுகளை E-SR UPDATION செய்து ஓய்வூதிய கருத்துருக்கள் காலதாமதம் இன்றி மாநிலக்கணக்காயருக்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

S. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) முடிவுத்தொகைகுரிய இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு கருத்துருக்கள் GDC க்கு அனுப்பும் போது விடுப்பட்ட சந்தா தொகை (Missing Credits) ஏதேனும் இருப்பின் அதற்கான சந்தா பிடிக்க விவரங்களை சம்பந்தப்பட்ட சம்பள வழங்கும் அலுவலரின் கையோப்பம் பெற்று கருத்துருக்களுடன் இணைத்து அனுப்பட்டப்பட்ள்ள அதனை GDC Data வுடன் சரிபார்த்து முடிவுத்தொகை ஆணை உரிய வழங்கணை விரைவில் அனுப்ப்டம் என GDC ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் விரைவில் CPS முடிவுத்தொகையினை ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பெற்று வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுகிறது.

மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளக்கிழமை அன்று மேற்படி நிலுவை இனங்கள் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களால் ஆய்வுக்கூட்டம் (Google meet) நடைபெறுவதால் அதற்கு முன்னதாவே அந்த வாரத்திற்குரிய முடிவு செய்யப்பட்ட இனங்களின்(settled) விபரங்களை Google sheet ல் பதிவேற்றம் செய்ய வேண்டும், எனவும் மொத்த நிலுவை இனங்களை விரைந்து முடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்றி தங்களது மாவட்டத்திற்கு அறிவுத்தப்படுகிறார்கள். 👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD DSE - Retirement Benefits PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.