நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மத்திய அரசு விளக்கம்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் நடைபெற்றது. இதற்கிடையே இன்று காலையில் டெலிகிராம், வாட்ஸ்-அப் உள்பட பல்வேறு சமூக ஊடகங்களில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக புகைப்படத்துடன் கூடிய தகவல் பரவியது.
இந்த நிலையில், தேர்வு தொடங்கும் முன்பே சமூக வலைத்தளங்களில் பரவிய வினாத்தாள் போலியானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "சமூக வலைத்தளங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகைப்படம் போலியானது.
நீட் தேர்வினை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வு நடக்கும் அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை செய்யப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக பரவும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.