ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை - முதன்மை கல்வி அலுவலர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 4 أبريل 2025

ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை - முதன்மை கல்வி அலுவலர்



ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை - முதன்மை கல்வி அலுவலர்

தனியார் பள்ளி ஆசிரியர்களை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 28) தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பொதுத் தேர்வினை, 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் படிக்கும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதுகின்றனர். இதற்காக 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வினை கண்காணிக்க 48 ஆயிரத்து 426 அறைக் கண்காணிப்பாளர்களும், 4 ஆயிரத்து 858 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில், 296 தேர்வு மையங்களில் 66 ஆயிரத்து 13 மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளனர். அதாவது, தமிழ்நாட்டிலேயே சென்னை மாவட்டத்தில் மட்டும் தான் அதிக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் பள்ளிகளும், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் சென்னையில் அதிகமாக உள்ளது. வழக்கமாக, பொதுத் தேர்வினை நடத்தும் பணியில் அறை கண்காணிப்பாளர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தனியார் பள்ளியின் ஆசிரியர்களும் தேர்வு பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களை அந்த நிர்வாகம் தேர்வு பணிக்கு அனுப்பாமல் இருக்கும் செயலும் நடைபெறுகிறது. சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாவட்டத்தில் தேர்வு பணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வரவில்லை என்பதை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு பணிக்கு அனுப்பாத தனியார் பள்ளி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்வு பணிக்கு அனுப்பாத தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களை தேர்வு பணிகளுக்கு அனுப்பவில்லை எனவும், தேர்வு பணிக்கு வராமல் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்வு பணி தொடர்பான கூட்டத்திற்கு 35 விழுக்காடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவில்லை என தெரிவித்துள்ளதுடன், அவர்களைப் பணிக்கு அனுப்பப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.