What announcements does the Tamil Nadu Budget 2025-26 have for school students? தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 பள்ளி மாணவர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்?
பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் உள்ள்ட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
2676 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 2000 பள்ளிகளில் ரூ160 கோடி மதிப்பில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் இருக்கும் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ56 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில் 1721 முதுகலை ஆசிரியர்கள், 840 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்.
‘நான் முதல்வன் கல்லூரிக் கனவு’ திட்டம் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் அகில இந்திய உயர்கல்வி, வெளிநாட்டு பல்கலை. கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு சென்றடைய முயற்சிகள் எடுக்கப்படும்.
முதற்கட்டமாக 388 ஊராட்சி ஒன்றியங்களில் 500 அரசுப் பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் சிறப்புப் பயிற்சி.
பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கில் பாப்பிரெட்டிப்பட்டி, சத்தியமங்கலம், சின்னசேலம், தாளவாடி, கல்வராயன் மலை, தளி, கோத்தகிரி, ஜவ்வாதுமலை ஆகிய இடங்களில் உள்ள 14 உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
சேலம், கடலூர், நெல்லையிலும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.