வினாத்தாள் கசிவு - அசாமில் பொதுத்தேர்வு ரத்து Question paper leak - Assam public exams cancelled
அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24- 29ம் தேதி வரை நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி முதல் அசாமில் தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு மார்ச் 29 அன்று முடிவடைய இருந்தது.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, மார்ச் 24- 29 வரை நடைபெற இருந்த அனைத்து 11 ஆம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்வதாக அசாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்தார்.
முன்னதாக அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.