ஆசிரியர்கள் & விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2024-2025 அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 3 فبراير 2025

ஆசிரியர்கள் & விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2024-2025 அறிவிப்பு.



ஆசிரியர்கள் & விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2024-2025 அறிவிப்பு.

பார்வை:

1 அரசாணை(டி) OT GOOT. 65, மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நாள்.19.08.2024 பிற்படுத்தப்பட்டோர், மற்றும் நல(பிந3(1))த்துறை,

2. இவ்வலுவலக இதே எண்ணிட்ட அறிவிக்கை நாள்: 06.01.2025

3. இவ்வலுவலக இதே எண்ணிட்ட தகவல் கடிதம் நாள்: 29.01.2025

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை . தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் / காப்பாளினிகளுக்கும் 2024-2025 - ஆம் கல்வியாண்டில் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக ( EMIS ) 31.12.2024 அன்றைய நிலையில் உள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில் பொதுமாறுதல் கலந்தாய்வு 04.02.2025 மற்றும் 05.02.2025 ஆகிய நாட்களில் மதுரை முதன்மை கல்வி அலுவலக அரங்கில் பின்வரும் விவரப்படி நடைபெற உள்ளது.

👇👇👇 CLICK HERE TO DOWNLOAD counselling Intimation -reg PDF

விவரம் 1. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் – பணிமாறுதல் -

2. கலந்தாய்வு அட்டவணை நாள் தொடர்பான

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் - பணிமாறுதல் கணினி பயிற்றுநர் நிலை-I - பணிமாறுதல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதல் -

1 04.02.2025 முற்பகல் காலை 10.00 மணிமுதல் 1.00 மணிவரை 6

கணினி பயிற்றுநர் நிலை-II 7. பட்டதாரி காப்பாளர்/ - காப்பாளினிகள் - பணிமாறுதல் கணிணி பயிற்றுநர் நிலை-II காலிப்பணியிடம் ஏதும் இல்லை என்பதால் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

05.02.2025 பிற்பகல் 2.00 மணிமுதல் 6.00 மணி வரை விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட தேதியில் காலை 09.00 மணியளவில் கலந்தாய்வு நடக்கும் வளாகத்தில் தங்கள் வருகையினை பதிவு செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறும், மேலும் நேரம் தவறி வந்து முறையீடு செய்பவர்களின் கோரிக்கை ஏற்கப்படாது எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.