யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்! Separate resolution in the Legislative Assembly against the new UGC rules!
ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார், ஆளுநர் பரிந்துரைப்பவரே தேடுதல் குழுவின் தலைவராகவும், யுஜிசி, பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர்களே உறுப்பினர்களாக ஆக முடியும் என என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ள யுஜிசி-க்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று(வியாழக்கிழமை) தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். அப்போது பேசிய அவர்,
'யுஜிசியின் புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிரானது.
மாநில அரசின் பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பது கெடுநோக்கம் கொண்டது.
எனவே புதிய விதிமுறைகளை யுஜிசி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழக அரசின் தீர்மானத்தைப் பார்த்து மத்திய அரசு தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் இந்த புதிய விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்.
கல்வியில் எதைச் செய்ய வேண்டுமோ மத்திய அரசு அதைச் செய்வதில்லை.
நீட் தேர்வு மூலமாக மருத்துவர்களின் கனவு சிதைக்கப்படுகிறது.
அரசு பொதுத்தேர்வு என்ற பெயரில் மாணவர்களை வடிகட்டி கல்வி கற்க முடியாமல் செய்கின்றனர்' என்றார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.