சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தோருக்கு Online Interview &Teaching Efficiency Test நடைபெறும் நாட்கள் அறிவிப்பு! Announcement of dates for Online Interview & Teaching Efficiency Test for applicants for the Best Science Teacher Award!
சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தோருக்கு Online Interview &Teaching Efficiency Test நடைபெறும் நாட்கள் அறிவிப்பு! Best Science Teacher Award
அறிவியல் நகரம், சென்னை - 25 - 2024-25 ஆம் ஆண்டிற்கான "சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது" - கணிதம் / உயிரியல் / வேதியியல் / இயற்பியல் / புவியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளில் - நிகழ்நிலை நேர்காணல் மற்றும் கற்பித்தல் திறன் (online interview and Teaching Efficiency Test) தேர்வு - தொடர்பாக. அரசாணை (நிலை) எண். 192, உயர் கல்வித்(பி)துறை, நாள்: 13.08.2018 பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணைக்கிணங்க, 2024-25-ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் அறிவியல் நகரத்தால் வரவேற்கப்பட்டு, விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் விவரம் துறைகள் வாரியாகவும், தேர்வு நாள் மற்றும் நேரம் தாங்களின் மேலான பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அளவில் வழங்கப்பட்டு வரும் "சிறந்த அறிவியல் ஆசிரியர்" விருதிற்கான முக்கியத்துவம் மற்றும் சிறப்பினை கருத்திற் கொண்டு, விருதிற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களிடம் வல்லுநர்கள் குழு நிகழ்நிலை நேர்காணல் மற்றும் கற்பித்தல் திறன் (online interview and Teaching Efficiency Test) தேர்வினை அறிவியல் நகரத்தில் இருந்து கூகுள்மீட் (Googlemeet) வாயிலாக நடத்துகிறது. எனவே, விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களும் இத்தேர்வில் கலந்துக் கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு தேவைப்படும் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும், ஏற்பாடுகளையும் உரிய முறையில் செய்து தரும்படி அந்தெந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்களை அறிவுறுத்துமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இத்தேர்வின் பொருட்டு பொருட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் இருந்து ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து, அறிவியல் நகரம் பொறுப்பு அலுவலரை தொலைபேசி : 044-29520142, 29520143, நிதி 6428528672
மின்னஞ்சல்: Scicitychennai@gmail.com, gsavel@gsihoen இணையதளம் : www.sciencecitychennai.in
தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக பொறுப்பு அலுவலரின் விவரங்களை உடனடியாக அறிவியல் நகரத்திற்கு தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.
இவ்விருதிற்கு விண்ணப்பித்து அறிவியல் நகரத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்நிலை நேர்காணல் மற்றும் கற்பித்தல் திறன் (online interview and Teaching Efficiency Test) தேர்வில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை அறிவியல் நகரம் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
CLICK HERE TO DOWNLOAD Online Interview &Teaching Efficiency Test நடைபெறும் நாட்கள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.