ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 7 نوفمبر 2024

ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.



ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்தது.

அதன் படி, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதற்காக மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

இதில், ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று, ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும்.

ரேஷன் கடை கட்டுனர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும். ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில், கல்வித் தகுதி 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பாக இருந்த போதிலும் பட்டப்படிப்பு படித்த ஏராளமானோர் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருக்கக் கூடும் என தெரிகிறது.

மேலும், இந்த பதவிகளுக்கு மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை தெரிய வரும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.