Indian Postal Bank ல் 344 காலியிடங்கள்: கல்வித் தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 15 أكتوبر 2024

Indian Postal Bank ல் 344 காலியிடங்கள்: கல்வித் தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது?

Indian Postal Bank ல் 344 காலியிடங்கள்: கல்வித் தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டெல்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.


கல்வித் தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்வது எப்படி?

எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் ரூ.750.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.