01.11.2024 - தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை - சர்ப்ரைஸ் கொடுக்கும் தமிழக அரசு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 18, 2024

01.11.2024 - தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை - சர்ப்ரைஸ் கொடுக்கும் தமிழக அரசு?



01.11.2024 - தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை - சர்ப்ரைஸ் கொடுக்கும் தமிழக அரசு?

தீபாவளி பண்டிகை ஒரு நாள் விடுமுறையுடன் முடிந்துவிடுமோ, சொந்த பந்தங்களை பார்க்க முடியாதோ என்ற கவலை பலதரப்பிலும் ஏற்பட்டுள்ளது.

31.10.2024 தீபாவளி வரும் நிலையில் ஒரு நாள் விடுமுறை போல் முடிந்துவிடுமோ என்ற கலக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களிடமும் உள்ளது. பண்டிகை முடியும் முன்பே கிளம்புவது ஒரு புறம் என்றால், ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வதால் பேருந்துகள், ரயில்களில் நெருக்கடி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தீபாவளிக்கு மறுநாள் 01.11.2024 அன்று அரசு பொது விடுமுறையாக அறிவித்தால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு சிரமமின்றி ஊர் திரும்ப முடியும் என்று பலதரப்பினரும் கூறுகின்றனர். அதற்கு பதிலாக வேறொரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

தீபாவளி தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்கு வசதியாக, நவம்பர் 1ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்:

தீபாவளி பண்டிகைக்கு வரும் 31ம் தேதி வியாழக்கிழமை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி முடிந்த மறுநாள் 1ம் தேதி மட்டும் அரசு வேலை நாளாக உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.