காலாண்டு தேர்வில் பிட் அடித்த மாணவிகள் - கண்டித்த ஆசிரியர்கள் - விபரீத முடிவால் அதிர்ச்சி – நடந்தது என்ன? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 22 سبتمبر 2024

காலாண்டு தேர்வில் பிட் அடித்த மாணவிகள் - கண்டித்த ஆசிரியர்கள் - விபரீத முடிவால் அதிர்ச்சி – நடந்தது என்ன?



காலாண்டு தேர்வில் பிட் அடித்த மாணவிகள் - கண்டித்த ஆசிரியர்கள் - விபரீத முடிவால் அதிர்ச்சி – நடந்தது என்ன?

கோவில்பட்டி அருகே தேர்வில் பார்த்து எழுதியதை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்து கொசு மருந்து லிக்யூட் குடித்த நான்கு மாணவிகள் – கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அய்யனேரி பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி கடந்த 60 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 90 மாணவ மாணவிகள்கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 21.09.2024 காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதி உள்ளனர். இதில் சில மாணவ மாணவிகள் பிட் அடித்து தேர்வு எழுதியதாக கூறி ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் சில மாணவிகள் இன்று மதியம் சத்துணவு சாப்பிட தாமதமாக சென்றதாக தெரிகிறது. அப்போது சமையலர் பாக்கியம் என்பவர் பரீட்சையில் பார்த்து எழுத தெரிகிறது. சாப்பிட தாமதமாக வந்தது ஏன் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 8ம் வகுப்பு மாணவிகள் காளியம்மாள், கன்ஷிகா, சுப்புலட்சுமி, அபிநயா ஸ்ரீ ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) ஆகிய நான்கு பேரும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அய்யனேரி பஸ் ஸ்டாப் அருகே உள்ள மெடிக்கலில் கொசு மருந்து லிக்யூட் வாங்கி குடித்ததாக தெரிகிறது. சற்று நேரத்தில் தலைச்சுற்றல் ஏற்படவே பயந்த மாணவி கன்ஷிகா தனது தாய் மாலதியிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொசு மருந்து லிக்யூட் குடித்த நான்கு மாணவிகளும் உடனடியாக மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.