CL, EL, RL தவிர பிற விடுப்புகள், பண்டிகை முன்பணம் போன்றவை Kalanjiyam App மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 9, 2024

CL, EL, RL தவிர பிற விடுப்புகள், பண்டிகை முன்பணம் போன்றவை Kalanjiyam App மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



CL, EL, RL தவிர பிற விடுப்புகள், பண்டிகை முன்பணம் போன்றவை Kalanjiyam App மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் விடுப்பு எடுப்பவர்கள் களஞ்சியம் மொபைல் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தற்செயல் விடுப்பு ஈடு செய்யும் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்புகளை தவிர மற்றும் ஏனைய விடுப்புகளை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அனுமதி ஆணை பெற்று அவ்வாணையை களஞ்சியம் செயலியில் ஏற்பளிப்பு செய்து பிறகு தான் ஊதிய வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது 5.5 5.3901/2022/1,6:05-08-2024

ஐயா / அம்மையீர்,

பொருள் :

IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் குறித்து ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சென்னை அவர்களின் காணொளி காட்சி கூட்டம் நடைப்பெற்றது - முக்கிய விவரங்கள் தெரிவிப்பது தொடர்பாக.

பார்வை ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை சென்னை அவர்களின் காணொளி காட்சி கூட்டம் நடைப்பெற்ற நாள், 02-08-2024. பார்வையில் காணும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சென்னை அவர்களின் காணொளிக் காட்சி கூட்டம் 02-08-2024-ம் நாளன்று நடைப்பெற்றது கீழ்கண்ட விவரங்கள் மற்றும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

I. களஞ்சியம் செயலி (KALANJIYAM MOBILE APP)

அனைத்து அரசு பணியாளர்களும் தங்களின் மொபைலில் களஞ்சியம் செயலியை கட்டாயமாக 2. 1) Profile, 2) Leave, 3) Payslip, 4) Reports ...etc விவரங்களை சரி பார்த்துக்கொள்ளவும்.
மேலும் இனிவருங்காலங்ளில் விடுப்பு எடுப்பவர்கள் களஞ்சியம் மொபைல் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் மற்றும் தற்செயல்விடுப்பு, ஈடுசெய்யும் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்புகளை தவிர மற்றும் ஏனைய விடுப்புகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் அனுமதி ஆணைப் பெற்று அவ்வாணையை மொபைல் செயலியில் ஏற்பளிப்பு செய்தபிறகுதான் ஊதியம் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்பணங்கள் சம்மந்தமாக அதாவது பண்டிகை முன்பணம், குறுகிய கால முன்பணம் போன்ற முன்பணம் விண்ணப்பங்கள் களஞ்சியம் மொபைல் செயலியின் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்

எனவே முழுமையாக களஞ்சியம் மொபைல் செயலியை பயன்படுத்தவேண்டும். இதில் ஏதேனும் குறைகள் தென்படின் குறைகளை களைய Feedback Report அனுப்பவேண்டும் மற்றும் ஏற்கனவே Navigation Path (HR-Report View - Employee List view Details) Web Id-யில் பதிவிட்டு ஏற்பளிக்கவேண்டும் அப்போதுதான் விடுப்பு விவரங்கள் முழுமையாக பதியப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.