CCRT பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 24, 2024

CCRT பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



CCRT பயிற்சிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

CCRT பயிற்சி - " The rich fabric of artistic and cultural heritage ஆகஸ்ட் நவம்பர் 2024 முடிய ஹைதராபாத் , டெல்லி , இராஜஸ்தான் , அஸ்ஸாம் - இல் புத்தாக்க பயிற்சி நடைபெறுதல் உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை அரசு / அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

பொருள் பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6 - CCRT பயிற்சி -"The rich fabric of artistic and cultural heritage " - ஆகஸ்ட் நவம்பர் 2024 முடிய ஹைதராபாத், டெல்லி, இராஜஸ்தான், அஸ்ஸாம்-இல் புத்தாக்க பயிற்சி நடைபெறுதல் - அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புதல் தொடர்பாக பார்வை புதுதில்லி, CCRT துணை இயக்குநரின் கடிதம் எண்.

CCRT/14011/1A/2024/5857 п. 29.07.2024.

பார்வையில் காணும் CCRT துணை இயக்குநரின் கடிதத்தில், அந்நிறுவனத்தால் ஆகஸ்ட் 2024 மற்றும் நவம்பர் 2024 முடிய "The rich fabric of artistic and cultural heritage" என்ற தலைப்பில் அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து பாட சிறப்பாசிரியர்/ பட்டதாரி/முதுநிலை ஆசிரியர்களில் 10 ஆசிரியர்கள் வீதம் 100 ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி ஹைதராபாத், டெல்லி, இராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இடங்களில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே, மேற்கண்ட விபரப்படி பயிற்சியில் கலந்து கொள்ள இணைப்பில் உள்ளபடி, ஆசிரியர்களை தெரிவு செய்து அதன் விபரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் மென்நகலாக (Excel file, details in in English) இவ்வலுவலகத்தின் 'வி2' floor v2section2022@gmail.com & Google spreadsheet (23.08.2024 லும்) என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடன் அனுப்புமாறும், கையொப்பமிட்ட கடிதத்தை விரைவு அஞ்சலில் அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

👇👇👇 CLICK HERE TO DOWNLOAD DSE - CCRT Training Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.