மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணியினை வரன்முறை செய்து அரசாணை வெளியீடு!
2015-2016 முதல் 2022-2023ஆம் ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணியினை வரன்முறை செய்து அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளின்கீழ் வகுப்பு IVஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் 2015-2016 முதல் 2022-2023ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்களை வரன்முறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 49
பள்ளிக் கல்வி [பக1(1)]த் துறை
நாள்: 21.02.2024 திருவள்ளுவர் ஆண்டு 2055 சோபகிருது, மாசி-9
படிக்கப்பட்டவை :
1. அரசாணை (நிலை) எண். 220, பள்ளிக் கல்வித்(ஏ1) துறை, நாள் 02.11.2006. 2. அரசாணை (நிலை) எண். 194, பள்ளிக் கல்வித்(ஏ1) துறை, நாள் 26.11.2014. 3. அரசாணை (நிலை) எண்.105, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 24.05.2018. 4. அரசாணை (நிலை) எண். 142, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 31.08.2015. 5. அரணை (நிலை) எண். 149, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 07.09.2015. 6. அரச, ணை (நிலை) எண். 24, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 04.02.2016. 7. அரசாணை (1டி) எண்.262, பள்ளிக் கல்வித்(பக 1(1)) துறை, நாள் 11.07.2016. 8. அரசாணை (நிலை) எண். 139, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 25.07.2016. 9. அரசாணை (1டி) எண். 182, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 14.03.2017. 10. அரசாணை (நிலை) எண். 97, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 18.05.2017. 11. அரசாணை (நிலை) எண். 78, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 25.04.2017. 12. அரசாணை (நிலை) எண். 170, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 17.07.2017 13. அரசாணை (டி) எண். 439, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 20.07.2017. 14. அரசாணை (நிலை) எண். 266, பள்ளிக் கல்வித் (பக1(1)) துறை, நாள் 26.12.2017. 15. அரசாணை (1டி) எண். 37, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 07.02.2018. 16. அரசாணை (நிலை) எண். 30, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 28.02.2018. 17. அரசாணை (நிலை) எண். 174, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 21.08.2018. 18. அரசாணை (நிலை) எண். 679, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 16.10.2018. 19. அரசாணை (நிலை) எண். 269, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 26.12.2018. 20. அரசாணை (நிலை) எண். 18, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 06.02.2019. 21. அரசாணை (1டி) எண். 150, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 10.05.2019. 22. அரசாணை (நிலை) எண். 181, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 14.10.2019. 23. அரசாணை (நிலை) எண். 184, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 22.10.2019. 24. அரசாணை (நிலை) எண். 71, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 18.08.2020. 25. அரசாணை (நிலை) எண். 72, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 24.08.2020. 26. அரசாணை (1டி) எண். 73, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 22.05.2020. 27. அரசாணை (1டி) எண். 134, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 28.09.2020. 28. அரசாணை (நிலை) எண். 99, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 29.10.2020. 29. அரசாணை (நிலை) எண். 43, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 23.02.2021. 30. அரசாணை(நிலை)எண்.46, மனித வள மேலாண்மைத் துறை, நாள் 11.05.2021. 31. அரசாணை (நிலை) எண். 78, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 18.04.2022. 32. அரசாணை (நிலை) எண். 136, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 02.08.2022. 33. அரசாணை (நிலை) எண். 169, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 30.09.2022. 34. அரசாணை (நிலை) எண். 170, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 30.09.2022. 35. அரசாணை (நிலை) எண். 171, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 30.09.2022. 36. அரசாணை (நிலை) எண். 05, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 05.01.2023. 37. அரசாணை (1டி) எண். 37, பள்ளிக் கல்வித்(பக1(1)) துறை, நாள் 24.03.2023. 38. அரசாணை (நிலை)எண். 85, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 24.04.2023, 39. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித எண்.40604/அ1/இ1/2018, நாள் 16.11.2023. 40. அரசாணை (1டி) எண். 294, பள்ளிக் கல்வித்(பக1(1) துறை, நாள் 28.12.2023.
ஆணை:-
பள்ளிக் கல்வித் துறையில் 'ஏ' மற்றும் பி பிரிவு பணியாளர்களுக்கு பணி முந்துரிமை நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்குவது குறித்து தொடரப்பட்ட பல்வேறு நீதிமன்ற வழக்குகள் காரணமாக மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆரியர்களுக்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல்கள் தற்காலிக பட்டியல்களாக வெளியிடப்பட்டு வந்தன. மேலே, இரண்டு மற்றும் மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே 1998 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலும், 2013-2014ஆம் ஆண்டு மற்றும் 2014-2015ஆம் ஆண்டு வரையிலும் வெளியிடப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தற்காலிக நியமனங்களை வரன்முறைப்படுத்தி ஆணைகள் வெளியிடப்பட்டன. 2. மேலே முப்பத்தொன்பதாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர், 2015-2016ஆம் ஆண்டு முதல் 2022-2023ஆம் ஆண்டுவரை வெளியிடப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தற்காலிக நியமனங்களை துறை பதவி உயர்வுக் குழுவின் முன் வைத்து முறைப்படுத்த ஏதுவாக தற்காலிக பதவி உயர்வு/பணி மாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலராக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட 464 அரசு உயர்நிலைப்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர்களுடன் கூடிய கருத்துருவினை அனுப்பியுள்ளார்.
3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு மேலே முப்பதாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, 2015-2016ஆம் ஆண்டு முதல் 2022-2023ஆம் ஆண்டுவரை, உரிய ஆண்டுகளுக்கான தேர்ந்தோர் பட்டியல்களில் சேர்த்து முறைப்படுத்த கருதப்பட்டு, அவர்களுள் மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியேற்காமல் ஓய்வு பெற்றவர்கள், தற்காலிக/நிரந்தர பதவி உயர்வு துறப்பு செய்தவர்கள் நீங்கலாக மீதமுள்ள 420 அலுவலர்கள் சார்ந்த விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு துறை பதவி உயர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர்களுள் பதவி உயர்விற்கான முன்னுரிமையில் இடம்பெற்றிருந்த போதிலும் தண்டனைக் காலத்தில் இருந்த 38 அலுவலர்கள் நீங்கலாக மீதமுள்ள இணைப்பு-Iல் அட்டவணை I(A), I(B),II(A),I(B),III(A),III(B),IV(A), IV(B),V(A),V(B),VI(A),VI(B) மற்றும் VII(A), VII(B)ல் இடம்பெற்றுள்ள 382 அலுவலர்களில் துணை ஆய்வாளர் தேர்வுதாள் I, II, III- ல் தேர்ச்சி பெறாதவர்களை மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் வரன்முறை செய்யும் பொருட்டு பொருட்டு மேலே முதலாவதாக வெளியிடப்பட்ட ஆணைக்கு விலக்களித்து அந்தந்த ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட காலிப்பணியிட மதிப்பீட்டிற்கேற்ப உரிய ஆண்டுகளுக்கான தேர்ந்தோர் பட்டியல்களில் சேர்த்து முறைப்படுத்த துறை பதவி உயர்வுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இணைப்பு 1 அட்டவணை I(C),II(C),III(C),IV(C), V(C),VI(C), மற்றும் VII(C)ல் உள்ள அலுவலர்களது பெயர்களை அவர்களது பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் அந்தந்த ஆண்டுகளுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் சேர்க்க பதவி உயர்வுக் குழு ஒப்புதல் அளிக்கவில்லை.
4. மேற்காண் நிலையில், 2015-2016ஆம் ஆண்டு முதல் 2022-2023ஆம் ஆண்டுவரை வெளியிடப்பட்டுள்ள மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தற்காலிக பதவி உயர்வினை முறைப்படுத்தி துறை பதவி உயர்வுக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டதன் அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2015-2016ஆம் ஆண்டு முதல் 2022-2023ஆம் ஆண்டுகளுக்கான தேர்ந்தோர் பெயர்பட்டியலில் சேர்க்க துறை பதவி உயர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ள இணைப்பில் அட்டவணை I(A), I(B), II(A), II(B), III(A), III(B), IV(A), IV(B), V(A), V(B), VI(A), VI(B) மற்றும் VII(A), VII(B)ல் இடம்பெற்றுள்ள அலுவலர்களது பெயர்களை, அவ்வலுவலர்களில் துணை ஆய்வாளர் தேர்வு 1, II, III-ல் தேர்ச்சி பெறாதவர்கள் பொருட்டு மட்டும் அரசாணை(நிலை) எண்.220, பள்ளிக் கல்வித் துறை, நாள் 02.11.2006ல் வெளியிடப்பட்ட ஆணைகளுக்கு விலக்களித்து அந்தந்த ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட் காலிப்பணியிட மதிப்பீட்டிற்கேற்ப உரிய ஆண்டுகளுக்கான தேர்ந்தோர் பட்டியல்களில் சேர்த்து முறைப்படுத்தலாம் எனவும் ii. அட்டவணை I(C), II(C), III(C), IV(C), V(C), VI(C), மற்றும் VII(C)ல் உள்ள அலுவலர்களது பெயர்களை அவர்களது பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் அந்தந்த ஆண்டுகளுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் சேர்த்து முறைப்படுத்த தேவையில்லை எனவும் கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
5. அரசாணை (நிலை) எண். 707, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, நாள் 03.07.1981-60 கண்டுள்ள நெறிமுறைகளின்படி இவ்வாணையில் ஏற்பளிக்கப்பட்ட தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.49 - DEO Regularisation Order PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.