ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 26, 2024

ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!



ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!

பள்ளிக் கல்வி - பொது சார்நிலைப் பணி - அரசு / நகராட்சி / மாநகராட்சி ( சென்னை , மதுரை , கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளிகள் நீங்கலாக ) உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களைச் சீரமைப்பு செய்திடவும், உபரியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை (Surplus with person) பணியிடமே அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கும், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் தேவை உள்ள பள்ளிகளுக்கும் பணிநிரவல் செய்திடவும் மற்றும் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை (Surplus without person) மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதத்தில், மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி (சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகள் நீங்கலாக) உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுக்கு அனுப்பி 593 பணியிடங்களில் 94 பணியிடங்கள் நீங்கலாக 499 பணியிடங்களை, காலிப் பணியிடங்களாகக் கருதி பணி நிரவல் மூலம் பூர்த்தி செய்து கொள்ள அனுமதியும் பணி நிரவல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதியும் வழங்கிடுமாறு அரசைக் கோரியுள்ளார்.

3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமாக பரிசீலனை செய்த அரசு அதனை ஏற்று, அரசு/ நகராட்சி/ மாநகராட்சி (சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகள் நீங்கலாக) உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணி நிரவல் செய்வது தொடர்பாக, பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடலாம் எனக் கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

(1) ஆய்வக உதவியாளர்களுக்குப் பணி நிரவல் கலந்தாய்வு 01.08.2023 அன்று பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையின் படி நடத்தப்பட வேண்டும். ஆய்வக உதவியாளர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் மற்றும் தேவையுள்ள பள்ளிகளில் கூடுதல் பணியிடங்களுக்குப் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறும். அதன் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும்.

ட்சி / மாநகராட்சி (சென்னை, மதுரை, கோயம்புத்தூர் நீங்கலாக) உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் அளவைப் பதிவேட்டுடன் ஒப்பிட்டு ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான மொத்தப் பணியிடங்களைப் பள்ளிவாரியாக இறுதி செய்தல் வேண்டும்.

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தெரிவித்துள்ளபடி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் எண்ணிக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின்படி மேற்காண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு பணியாளர்களை நிர்ணயித்து பணியாளருடன் உபரி, பணியாளரின்றி உபரி பட்டியலை தொகுக்க வேண்டும்.

கலந்தாய்வின் போது மாவட்டத்திற்குள் பணியாளருடன் உபரியாக இருப்பவரை பணிநிரவல் செய்வது மற்றும் பணியாளர் இன்றி உபரியாக உள்ள பணியிடத்தினைப் மேற்காண் அரசாணைப்படி தேவை உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்வது (Distribution of Surplus post) ஆகியவற்றினை முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்திற்குள் பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய பணியிடம் இல்லையென்றால் அதன் தேவையையும், மாவட்டத்திற்குள் பள்ளிகளுக்குப் புதிய பணியிடம் வழங்கியது போக மீதம் இருப்பின் அதன் விவரங்களையும், பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். (vii) உபரி-கண்டறிதல்

(1) மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் பணியாளருடன் உபரி எண்ணிக்கை கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ள ஆய்வக உதவியாளர்களை முதலில் பள்ளி வாரியாக, அப்பள்ளியில் இறுதியாக பள்ளியில் சேர்ந்த நாளின் (Station Seniority) அடிப்படையில் பணிபுரியும் இடத்தில் இளையவர் (Station Junior) எனக் கண்டறிய வேண்டும். அப்பட்டியலை மாவட்ட அளவில் பணிநிரவல் செய்ய ஏதுவாக ஆய்வகப் பணியாளர் பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் அடிப்படையில் பணியில் சேர்ந்த நாளினை கணக்கில் கொண்டு பணிநிரவல் மாறுதலுக்கான பணிமூப்புப் பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

(2) பணிபுரியும் இடத்தில் இளையவரைக் கண்டறியும் போது 40 சதவீதம் கண் பார்வையற்றவர்கள் மற்றும் 40 சதவீத மாற்றுத் திறனாளிகள் எவரேனும் உபரியாக கண்டறியப்பட்டிருப்பின் அவர்களுக்கு விதிவிலக்கு அளித்து அவருக்குப் பதிலாக அதே பள்ளியில் அடுத்த நிலையில் உள்ள இளையவரை உபரியாகத் தெரிவு செய்து பணி நிரவலுக்கு உட்படுத்த வேண்டும்.

(vii) ஆய்வக உதவியாளருக்குப் பணி நிரவல் கலந்தாய்வு முன்னுரிமை (Priority) 1. மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்.

செய்தவர்கள், டையாலிசிஸ் 2. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை புற்றுநோயாளிகள்.

3. இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர்.

சிகிச்சை சிகிச்சை செய்தவர்கள், 4. விதவைகள்/ மனைவியை இழந்தவர்கள். 40 வயதைக் கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் மற்றும் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் பணியாளர்கள்.

(ix) காலிப்பணியிடம்

நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களை ஆவணங்களுடன் ஒப்பீடு செய்து முதன்மைக் கல்வி அலுவலர் தயார் செய்திட வேண்டும்.

(x) கூடுதல் பணியிடம்

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின் படி மாணவ மாணவியரின் எண்ணிக்கையின் அடிப்படையில் இதுவரை ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் இல்லாத பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்கள் கூடுதல் பணியிடங்கள்.

ஏற்கனவே ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ மாணவியரின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பின் மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையின் படி கூடுதல் பணியிடம் வழங்கப்படும். (xi) கல்வித் தகவல் மேலாண்மை தளத்தில் பதிவேற்றம்

மேற்காண் பணியாளருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளர்களைக் கல்வித் தகவல் மேலாண்மை தளத்தில் (EMIS) மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்நுழைவின் மூலம் (CEO Login ID) பணிநிரவல் படிவத்தில் (Deployment Format) பணிநிரவலுக்கு உட்படுத்த வேண்டும். உபரி ஆய்வக உதவியாளர்களை முன்னுரிமை மற்றும் பணிமூப்பு வாரியாக (Priority wise & Seniority order wise) வரிசைகிரமமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

(xll) பணி நிரவல் - பணி மூப்பு (Senlorty)

1. பணிநிரவல் மேற்கொள்ளும்போது நிரப்பத்தகுந்த காலிப் பணியிடத்திற்கு பணிநிரவல் செய்யப்படவேண்டும். மேலும், அவ்வகையில் பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி எனக் கண்டறியப்பட்ட ஆய்வக உதவியாளரில் மூத்தவர் முதலில் பணிநிரவல் செய்யப்படவேண்டும். 2. ஆய்வக உதவயாளராக பணியிறக்கம் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடையாணை அல்லது பிரத்தியோக ஆணை மற்றும் தீர்ப்பாணை பெறப்பட்ட நிகழ்வுகளில், நீதிமன்ற தீர்ப்பாணைக்கு ஏற்ப செயல்படவேண்டும்.

Reserve One Post என தீர்ப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தால் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடத்தை நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

3. முன்னுரிமைக்குப்பின் (Priority) ஒன்றுக்கும் மேற்பட்டோர் இருப்பின் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை.

ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் பணிவரன் முறை செய்யப்பட்ட நாள். பணிவரன்முறை நாள் ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு ஒரே நாளாக இருந்தால் அவர்களுடைய பிறந்த நாள் கணக்கில் கொள்ள வேண்டும்.

பிறந்த நாள் ஒரே நாளாக இருந்தால் பெயரின் அகர வரிசைப்படி முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஒரு ஆய்வக உதவியாளர் மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வில் கலந்து கொண்டு ஒரு பணியிடம் தேர்ந்தெடுத்த பின் மீண்டும் மாநில அளவிலான கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

ஆய்வக உதவியாளர் பணிநிரவல் மேற்கொள்ளும்போது முதலில் மாவட்டதிற்குட்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.141 Lab Asst Deployment PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.