அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில்
அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரி யர் நியமிக்க வேண்டும் என்று கல்விமேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்வி மேம் பாட்டு கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது:
கல்வித் துறை அரசாணை எண் 250-ன்படி அரசுப் பள்ளி களில் தொடக்க நிலை வகுப்புக ளிலிருந்தே 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்ட னர். ஆனால், கடந்த 33 ஆண் டுகளாக இருந்த நடைமுறை அரசாணை எண் 525-ன்படி 40 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என மாற்றப்பட்டது. இதனால், குழந்தைகளின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998-ஆம் ஆண்டு 5- ஆவது ஊதியக் குழு பரிந்து ரையின் அடிப்படையில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செல வினத்தைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது.
கல்வி உரிமைச் சட்டம் 2009
நடைமுறைக்கு பின் தொடக் கப் பள்ளிகளில் 30 மாணவர்க ளுக்கு ஓர் ஆசிரியர், நடுநிலைப் பள்ளிகளில் 35 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுகின் றனர். இலவசக் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டம் நிறைவேற்றப் பட்ட பிறகு தனியார் பள்ளிக ளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து உபரி ஆசி ரியர்களின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. கட்டாய கல்வி உரிமைச்
சட்டத்தின்படி 25 சதவீத வாய்ப்புமறுக்கப்பட்டநலிவுற்ற பிரிவுக் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்ற னர்.
அரசுப் பள்ளிகளில் மாண வர் எண்ணிக்கை குறைய கல்வி உரிமைச் சட்டமே காரணமாக உள்ளது. அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கல்வி உரிமைச் சட்ட விதிமுறை களில் திருத்தம் செய்ய வேண் டும். இதற்கு மாநில அரசு மத் திய அரசை வலியுறுத்த வேண் டும்.
தற்போதுள்ள 30 குழந்தை களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நடைமுறைப்படி 60 குழந்தை கள் படிக்கும் ஒரு தொடக்கப் பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் 2 ஆசிரியர்கள் மட்டுமே அனைத் துப் பாடங்களையும் கற்பிக்கும் நிலை உள்ளது.
எனவே, தமிழகத்தில் 1997- ஆம் ஆண்டு வரை இருந்ததைப் போல 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என நியமித்தால் உபரி ஆசிரியர் என்ற நிலை இருக் காது. இதன் மூலம் 41 முதல் 60 குழந்தைகள் படிக்கும் ஒரு தொடக்கப் பள்ளியில் 3 ஆசி ரியர்கள் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கும். இதன் மூலம் அர சுப் பள்ளி மாணவர்களுக்கு தர மான கல்வி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
الاثنين، 10 يونيو 2024
New
அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தல்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.