Middle School HM to BEO Promotion Counseling Schedule 2024 - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 13, 2024

Middle School HM to BEO Promotion Counseling Schedule 2024 - Director Proceedings



BEO PROMOTION From Middle school HM- COUNCELING ON 14.6.24

Middle School HM to BEO Promotion Counseling Schedule 2024 - Director Proceedings

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 14.06.24 அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்- தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் - BEO PROMOTION From Middle school HM- COUNCELING ON 14.6.24 @ 11 a.m onwards. பார்வை 3 கண்டுள்ள செயல்முறைகளில் 01.01.2024 நிலவரப்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் திருத்திய இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 14.06.2024 அன்று காலை 11:00 மணிக்கு EMIS இணையதளம் மூலம் Online இல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (தொடக்கக் கல்வி) நடத்தப்படவுள்ளது. பார்வை 3 கண்டுள்ள செயல்முறைகளில் வெளியிடப்பட்ட திருத்திய இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியலில் முன்னுரிமை எண்.1 முதல் 175 வரையில் இடம்பெற்றுள்ள அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களையும் இக்கலந்தாய்வில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இக்கலந்தாய்வினை தங்களது அலுவலகத்தில் நடத்திட தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD BEO promotion counseling schedule PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.