" 2,222 ஆசிரியர் பணியிடங்கள் .. " . அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 30 يونيو 2024

" 2,222 ஆசிரியர் பணியிடங்கள் .. " . அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

" 2,222 ஆசிரியர் பணியிடங்கள் .. " . அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி, அந்த தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு 2 ஆயிரத்து 222 பேர் டிஆர்பி தேர்வு எழுதி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த மாத இறுதிக்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

Educational Minister Speech video - Click here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.